மான்செஸ்டர்: ஐ.சி.சி உலகக் கோப்பை 2019-க்கான அரையிறுதிக்கான போர் இன்னும் இறுதி கட்டத்தை எட்டவில்லை. 34 போட்டிகளுக்குப் பிறகு, ஆஸ்திரேலியாவின் அணி மட்டுமே அரையிறுதிக்கு நுழைந்துள்ளது. அடுத்த இடத்தில் இருக்கும் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு செல்லும் நிலையில் உள்ளன, அதில் இந்தியாவவுக்கான வாய்ப்பு முதலிடத்தில் உள்ளன.
அதே நேரத்தில் உலகக் கோப்பை போட்டியின் தொடக்கத்தில் வலுவான அணியாக வலம் வந்த இங்கிலாந்து, தற்போது உள்ளே, வெளியே என்ற கடைசி கட்டத்தில் உள்ளது. இன்னும் 2 போட்டிகள் மீதமுள்ளன. இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் அடுத்த போட்டி இந்தியாவுடன். வரும் 30 ஆம் தேதி இந்தியா மற்றும் இங்கிலாந்து (India vs England) அணிகள் மோத உள்ளன.
இந்தநிலையில், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் இந்திய அணியை குறித்து பேசியுள்ளார். அதாவது தனது ட்விட்டர் பக்கத்தில், இந்திய கிரிக்கெட் அணியைப் பாராட்டி கருத்து பகிர்ந்துள்ளார்.
ட்விட்டர் பக்கத்தில், "எனது கருத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. இந்தியாவை வீழ்த்தும் அணி உலகக் கோப்பையை வெல்லும்." எனப் பதிவிட்டுள்ளார்.
Will stick to it ... Whoever beats India will WIN the World Cup ... !!! #CWC19
— Michael Vaughan (@MichaelVaughan) June 27, 2019
2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை தோற்கவில்லை. இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி, இந்தமுறையும் பட்டம் வெல்ல வாய்ய்பு பிரகாசமாக இருக்கிறது.
இந்தியா 11 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது, ஆறு போட்டிகளில் ஐந்து வெற்றிகளைப் பெற்றது. இந்திய அணி இங்கிலாந்தைத் தவிர பங்களாதேஷ் மற்றும் இலங்கை போன்ற பலவீனமான அணிகளுடன் விளையாட வேண்டும். அதேசமயம் இங்கிலாந்து அணி ஏழு போட்டிகளில் 8 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளது. அடுத்து இந்தியா மற்றும் நியூசிலாந்து உடன் மட்டுமே விளையாட உள்ளது. இதில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து அணி உள்ளது.