IPL 2019: இன்று பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன -ஒரு அலசல்

IPL 2019 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 16, 2019, 02:26 PM IST
IPL 2019: இன்று பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன -ஒரு அலசல் title=

மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேஷன் பிந்த்ரா ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள, இன்றைய போட்டியில் கிங்ஸ் XI பஞ்சாப் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோத உள்ளன.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏழு லீக் ஆட்டத்தில் விளையாடி வெறும் இரண்டு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. நான்கு புள்ளிகளுடன் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. அதேபோல எட்டு போட்டிகளில் விளையாடி உள்ள கிங்ஸ் XI பஞ்சாப் அணி நான்கு போட்டிகளில் வெற்றியும், நான்கு போட்டிகளில் தோல்வியும் சந்தித்துள்ளது. எட்டு புள்ளிகளுடன் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. பஞ்சாப் அணி கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. 

ஏற்கனவே நடந்த இரு அணிகளுக்கும் இடையிலான லீக் போட்டியில் 14 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி தோல்வியை கண்டுள்ளது. அதற்கு பதிலடி தரும் முனைப்பில் ராஜஸ்தான் விளையாடக்கூடும். அதேவேளையில் புள்ளிபட்டியலில் முன்னேற பஞ்சாப் அணி தனது முழு பலத்தையும் வெளிப்படுத்தும். எனவே இன்றைய ஆட்டம் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது எனத் தெரிகிறது.

இரு அணிகளும் புள்ளிபட்டியலில் முன்னேற இந்த போட்டி மிக முக்கியமான ஒன்றாக இருக்கும். இதுவரை இரு அணிகளும் 18 ஆட்டத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். அதில் பஞ்சாப் அணி 8 போட்டியிலும், ராஜஸ்தான் அணி 10 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.

Trending News