ஐபிஎல் இறுதிப்போட்டி டாஸ் புள்ளிவிவரங்கள்: இன்று ஐபிஎல் 2021 சாம்பியன் கோப்பையை யார் வெல்வார்கள் என்பதை முடிவு செய்யும் போட்டியின் முறை. இன்று (அக்டோபர் 15, வெள்ளிக்கிழமை) ஐபிஎல் 2021 இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) அணிகள் மோதுகின்றன.
உலகக் கோப்பையை வென்ற இரண்டு கேப்டன்களும் (எம்எஸ் தோனி மற்றும் இயோன் மோர்கன் - MS Dhoni and Eoin Morgan) இந்த சிறந்த போட்டியில் நேருக்கு நேர் சந்திப்பார்கள். இந்தப் போட்டி துபாய் மைதானத்தில் நடைபெறும். இறுதிப் போட்டி என்பதால், வெளிப்படையாக அனைத்து வகையான புள்ளிவிவரங்கள் குறித்து தெரிந்துக்கொள்ளுவோம். அத்தகைய சூழ்நிலையில், டாஸ் எவ்வளவு முக்கியம் என்பதை நாங்கள் இங்கே உங்களுக்குச் சொல்ல இருக்கிறோம்.
ALSO READ | 2012-ல் என்ன நடந்தது? 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பைனலில் மோதும் CSK vs KKR
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன்கள் ஐபிஎல் 2021 இறுதிப் போட்டிக்கு (Final of IPL 2021) முன் டாஸ் வெல்ல வேண்டும். இரு அணிகளும் எந்தவிதமான சவாலையும் எதிர்கொள்ளும் திறன் கொண்டவை என்றாலும், ஆடுகளத்தின் நிலை மற்றும் நிலைமைகளை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு அணியும் அதன் சொந்த உத்தியை உருவாக்கி, டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யலாமா அல்லது முதலில் பந்து வீசலாமா என்பதை முடிவு செய்ய வேண்டும்.
ஐபிஎல் இறுதிப் போட்டியின் வரலாற்றில், முதலில் பேட்டிங் செய்யும் அணி அதிக போட்டிகளில் வென்றுள்ளதா? அல்லது இலக்கைத் துரத்தும் அணி வென்றுள்ளதா? என்பதை நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம்.
- ஐபிஎல் இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அணி - 8 முறை வென்றது
- ஐபிஎல் இறுதிப் போட்டியில் சேசிங் அணி - 5 முறை வென்றது
- கடந்த ஐபிஎல் இறுதிப் போட்டி (2020) துபாயில் நடந்தது - மும்பை இந்தியன்ஸ் அணி இலக்கை துரத்தி பட்டம் வென்றது
ALSO READ | சென்னை அணியின் இந்த 5 வீரர்கள் கே.கே.ஆர் கோப்பைக் கனவை தகர்க்க முடியும்
ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் வென்றவர்கள்:
ஐபிஎல் 2008 இறுதிப் போட்டியில் வென்றவர் - இரண்டாவது பேட்டிங் செய்யும் அணி (ராஜஸ்தான் ராயல்ஸ்)
ஐபிஎல் 2009 இறுதிப் போட்டியில் வென்றவர் - முதலில் பேட்டிங் செய்த அணி (டெக்கான் சார்ஜர்ஸ்)
ஐபிஎல் 2010 இறுதிப் போட்டியில் வென்றவர் - முதலில் பேட்டிங் செய்த அணி (சென்னை சூப்பர் கிங்ஸ்)
ஐபிஎல் 2011 இறுதிப் போட்டியில் வென்றவர் - முதலில் பேட்டிங் செய்த அணி (சென்னை சூப்பர் கிங்ஸ்)
ஐபிஎல் 2012 இறுதிப் போட்டியில் வெற்றியாளர் - இரண்டாவது பேட்டிங் செய்த அணி (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
ஐபிஎல் 2013 இறுதிப் போட்டியில் வென்றவர் - முதலில் பேட்டிங் செய்த அணி (மும்பை இந்தியன்ஸ்)
ஐபிஎல் 2014 இறுதிப் போட்டியில் வெற்றியாளர் - இரண்டாவது பேட்டிங் செய்த அணி (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
ஐபிஎல் 2015 இறுதிப் போட்டியில் வென்றவர் - முதலில் பேட்டிங் செய்த அணி (மும்பை இந்தியன்ஸ்)
ஐபிஎல் 2016 இறுதிப்போட்டியின் வெற்றியாளர் - முதலில் பேட்டிங் செய்த அணி (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்)
ஐபிஎல் 2017 இறுதிப் போட்டியில் வென்றவர் - முதலில் பேட்டிங் செய்த அணி (மும்பை இந்தியன்ஸ்)
ஐபிஎல் 2018 இறுதிப்போட்டியின் வெற்றியாளர் - இரண்டாவது பேட்டிங் செய்த அணி (சென்னை சூப்பர் கிங்ஸ்)
ஐபிஎல் 2019 இறுதிப் போட்டியில் வென்றவர் - முதலில் பேட்டிங் செய்த அணி (மும்பை இந்தியன்ஸ்)
ஐபிஎல் 2020 இறுதிப் போட்டியில் வென்றவர் - இரண்டாவது பேட்டிங் செய்த அணி (மும்பை இந்தியன்ஸ்)
ALSO READ | தீடீரென ஓய்வை அறிவித்த சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR