India vs Australia 1st Test: இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான நாக்பூர் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்திற்கு இந்திய அணியின் கை ஓங்கி இருந்தது. ஆஸ்திரேலிய அணியால் களத்தில் எதையும் செய்ய முடியவில்லை. ஆனால் ஆஸ்திரேலிய ஊடகங்கள் இந்திய அணியை குறிவைத்து செய்திகள் வெளியிட்டனர். அதாவது ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் பந்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா பந்துவீசும்போது தனது ஆள்காட்டி விரலில் திரவம் போல பூசிக்கொண்டு பந்து வீசும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.
இந்த வீடியோ வைரலானதை அடுத்து, ஆஸ்திரேலிய ஊடகங்கள் ஒரு சலசலப்பை உருவாக்கியதோடு மட்டுமில்லாமல் ஜடேஜா பந்தை சேதப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் தற்போது இந்த விவகாரம் குறித்து இந்திய அணி விளக்கம் அளித்துள்ளது. உண்மையும் வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க: IND Vs AUS 1st Test: கும்பிளேவை ஓவர் டேக் செய்து மகத்தான சாதனை படைத்த அஸ்வின்..!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நாக்பூர் டெஸ்டின் முதல் நாளில், சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ குறித்து இந்திய அணி நிர்வாகம், ஐசிசி மேட்ச் ரெஃப்ரி ஆண்டி பைக்ராஃப்டிடம் "ரவீந்திர ஜடேஜா தனது பந்துவீச்சில் கையின் ஆள்காட்டி விரலில் வலி நிவாரணி கிரீம் தடவியதாகக் கூறியுள்ளது.
முதல் நாள் ஆட்டம் முடிந்ததும், கேப்டன் ரோஹித் ஷர்மா, இந்திய அணி மேலாளர் மற்றும் ஜடேஜாவுக்கு இந்த சம்பவத்தின் வீடியோ காட்சி காண்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. வீடியோ வைரலானதை அடுத்து இந்த சம்பவம் குறித்து அவரிடம் தெரிவிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்திய அணிக்கு வீடியோ காட்சியை மேட்ச் ரெஃப்ரி பைக்ராஃப்ட் காட்டியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஆஸ்திரேலிய அணி போட்டி நடுவரிடம் எந்த புகாரும் அளிக்கவில்லை. ஆட்டத்தின் சூழ்நிலையைப் பொறுத்து, போட்டி நடுவர் புகார் அளிக்க வேண்டிய அவசியமின்றி இதுபோன்ற சம்பவங்களை சுயாதீனமாக விசாரிக்கலாம். இதன்மூலம் ஜடேஜாவுக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை என்றும் புரிந்து கொள்ளப்படுகிறது. கிரிக்கெட் சட்டங்களின்படி, பந்து வீச்சாளர் எந்த வகைப் பொருளையும் கைகளில் தடவி பந்தின் நிலை பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய நடுவரின் அனுமதி தேவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய அணியில் அடுத்தடுத்டு அவுட் ஆகி பாதி பேர் பெவிலியன் திரும்பிய போது இந்த சம்பவம் நடந்துள்ளது. முன்னதாக மார்னஸ் லாபுசாக்னே, ரென்ஷா, ஸ்டீவ் ஸ்மித் போன்ற பேட்ஸ்மேன்களுக்கு பெவிலியன் செல்லும் வழியை ஜடேஜா காட்டினார். ரவீந்திர ஜடேஜாவின் அற்புதமான பந்துவீச்சு காரணமாக ஆஸ்திரேலிய அணி 177 ரன்களுக்குச் சுருண்டது. முதல் இன்னின்ஸில் ஜடேஜா மொத்தம் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மேலும் படிக்க: IND VS AUS: கோலி 64 ரன்கள் அடித்தால்... சச்சினின் இந்த சாதனையும் அவுட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ