டோக்கியோ பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார் அவனி லேகாரா.
துப்பாக்கிச்சுடும் போட்டியில் ஆர் 2 பிரிவில் தங்கம் வென்றார் இந்த பாரலிம்பிக்ஸ் தங்க மங்கை. மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டிகளில் பொன் பதக்கத்தை வென்று தந்த பெண் அவனி லேகாரா.
"Life consists not in holding good cards, but in playing those cards you hold well."
Congratulations, @AvaniLekhara! #IND #Gold #Paralympics #ShootingParaSport https://t.co/9PDK88xAxj
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) August 30, 2021
தங்கம் வென்ற அவனி லேகாரா, பெண்களின் ஆர் 2 10 மீ ஏர் ரைஃபிள் எஸ்ஹெச் 1 பிரிவில் உலக சாதனையை சமன் செய்தார். பாராலிம்பிக்ஸ் போட்டிகளில், ஆண்கள் டிஸ்கஸ் த்ரோ எஃப் 56 போட்டியில், யோகேஷ் கத்துனியா மற்றும் தேவேந்திர ஜஜாரியா வெள்ளிப்பதக்கம் வென்றனர். சுந்தர் குர்ஜார் வெண்கலம் பெற்றார்
#WATCH | Family members of discus thrower Yogesh Kathuniya burst into celebration as he wins silver medal in class F56 at Tokyo Paralympics, at their residence in Bahadurgarh, Haryana pic.twitter.com/vI48IKLgSl
— ANI (@ANI) August 30, 2021
டோக்கியோ பாராலிம்பிக்கில் அஜீத் சிங் இன்று இறுதிப் போட்டியில் கலந்துக் கொள்கிறார்.
ஈட்டி எறிதல் போட்டில் சுமித் ஆன்டில் மற்றும் சந்தீப் சவுத்ரி ஆகிய இருவருரும் ஆண்கள் F64 போட்டிகளில் பங்கேற்கின்றனர். துப்பாக்கிச் சுடும் போட்டியில் தீபக் சைனி மற்றும் ஸ்வரூப் உனல்கர் ஆகியோர் ஆண்கள் ஆர் 1 10 மீட்டர் ஏர் ரைபிள் எஸ்எச் 1 போட்டியில் இன்று கலந்துக் கொள்கின்றனர்.
முன்னதாக பாராலிம்பிக்கில் பவினா பென் படேல் மற்றும் நிஷாத் குமார் வெள்ளி பதக்கம் வென்றுள்ளனர்.இதனால், டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் இந்தியாவுக்கு இதுவரை ஒரு தங்கம் மற்றும் நான்கு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.
READ ALSO | Paralympic Games: வெள்ளிப் பதக்கம் வென்ற பவினாபென் படேலுக்கு இந்தியா வாழ்த்து
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR