Tokyo Olympics 2020: ஜப்பன் தலைநகர் டோக்கியோவில் கடந்த 24 ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு 32வது ஒலிம்பிக் போட்டி கோலாகலமாகத் துவங்கியது. இந்த போட்டியில் இந்தியாவிலிருந்து 127 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.
கொரோனா அச்சம் காரணமாக, இந்தியா சார்பில் 20 பேர் மட்டுமே டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் (Tokyo Olympics) பங்கேற்றார்கள். இதில், 8 அதிகாரிகளும் அடங்குவர். அதன்படி ஃபென்சிங் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கும் முதல் வீராங்கனை தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானி தேவி (Bhavani Devi). இன்று அவருடைய சேபர் பிரிவு ஃபென்சிங் போட்டிகள் தொடங்கின. இதில் பெண்களுக்கான தனிநபர் சாப்ரே பிரிவில் தமிழக வீராங்கனை பவானி தேவி, துனிசியாவின் நாடியா பென் அஜிசியும் மோதினர்.
ALSO READ | Tokyo Olympics 2020: இந்தியாவின் பிவி சிந்து பாட்மிண்டன் முதல் சுற்றில் வெற்றி
இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய பவானி தேவி 15-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் இந்தியா சார்பில் முதல் முறையாக ஒரு வீராங்கனையாக ஒலிம்பிக் ஃபென்சிங் போட்டியில் பங்கேற்று வரலாற்று சாதனைப் படைத்துள்ளார்.
Are you ready to cheer for our talented fencer @IamBhavaniDevi as she gets ready to make her Olympic debut?
She starts her first match in a few minutes, so stay tuned for updates and keep sending in your #Cheer4India messages.#Tokyo2020#Fencing pic.twitter.com/2tcozF7PLD
— SAIMedia (@Media_SAI) July 25, 2021
இந்நிலையில் இதன்மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கில் வாள்வீச்சு போட்டியில் தமிழக வீராங்கனை பவானி தேவி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
ALSO READ | Tokyo Olympics 2020: இந்தியாவின் பதக்க வேட்டை துவங்கியது, வெள்ளி வென்றார் மீராபாய் சானு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR