TNPL Auction: ஏலத்தில் எடுக்கப்பட்ட டாப் 10 வீரர்கள் - முழு விவரம்

Tamil Nadu Premier League Auction: டிஎன்பிஎல் தொடருக்கு நடத்தப்பட்ட வீரர்களுக்கான ஏலம் முடிவடைந்துள்ள நிலையில், அதிக தொகைக்கு எடுக்கப்பட்ட முதல் 10 வீரர்கள் குறித்து இதில் பார்க்கலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Feb 24, 2023, 05:00 PM IST
  • டிஎன்பிஎல் ஏலம் நேற்றும், இன்றும் நடைபெற்றது.
  • சாய் சுதர்சன் அதிகபட்ச தொகைக்கு ஏலம் போனார்.
  • ரவிச்சந்திரன் அஸ்வின் திண்டுக்கல் அணி நிர்வாகத்துடன் ஏலத்தில் பங்கேற்றார்.
TNPL Auction: ஏலத்தில் எடுக்கப்பட்ட டாப் 10 வீரர்கள் - முழு விவரம் title=

Tamil Nadu Premier League Auction 2023: டிஎன்பிஎல் எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடருக்கான வீரர்கள் ஏலம் சென்னை மகாபலிபுரத்தில் நேற்றும், இன்றும் நடைபெற்றது. மொத்தம் 943 வீரர்கள் ஏலம்விடப்பட்டது. மொத்தம் 8 அணிகள் இநத் ஏலத்தில் பங்கேற்றன. இதில், ஒரு அணிக்கு தலா ரூ. 70 லட்சம் ஒதுக்கப்பட்டது. ஒரு அணி குறைந்தபட்சம் 16 வீரர்களையும், அதிகபட்சமாக 20 வீரர்களையும் எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

முதல் நாளான நேற்று பல்வேறு நட்சத்திர வீர்ரகள் ஏலம் போன நிலையில், இன்று ஏலம் தொடர்ந்து நடைபெற்றது. வீரர்கள் அவர்களின் அனுபவம் மற்றும் போட்டிகளில் விளையாடியது ஆகியவற்றின் அடிப்படையில் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தனர். இதில், நட்சத்திர வீரர் அஸ்வினை திண்டுக்கல் அணியும், ஷாருக்கானை கோயம்புத்தூர் அணியும் தக்கவைத்துக்கொண்டன. 

முக்கிய வீரர்கள்!

இரண்டு நாள் ஏலத்தின் முடிவில், அதிகபட்ச தொகைக்கு சாய் சுதர்சன்தான் தேர்வாகியிருந்தார். அவரை ரூ. 21.60 லட்சம் கொடுத்து கோவை அணி வாங்கியிருக்கிறது. இவரை அடுத்து, சகோதரர்களான சஞ்சய் யாதவ், சோனு யாதவ் ஆகியோரும் அதிகபட்ச தொகைக்கு எடுக்கப்பட்டனர். 

நான்கு முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, ரூ.17.6 லட்சம் கொடுத்து சஞ்சய் யாதவையும், நெல்லை அணி ரூ. 15.2 லட்சம் கொடுத்து சோனு யாதவையும் வாங்கியுள்ளனர். இதற்கிடையே, திண்டுக்கல் டிராகன்ஸ் ரூ. 15.95 லட்சம் கொடுத்து ஷிவம் சிங்கை எடுத்துள்ளது. தொடர்ந்து, சேலம் அணி அபிஷேக் தன்வரை ரூ. 13.2 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளது. 

மேலும் படிக்க | இந்திய அணியில் இந்த வீரரின் கேரியர் முடிந்துவிட்டது! பிசிசிஐ திடீரென எடுத்த முடிவு!

இடதுகை வேகப்பந்துவீச்சாளரான நடராஜனை ரூ. 6.25 லட்சத்திற்கு திருச்சி அணி வாங்கியது. தொடர்ந்து, சாய் கிஷோரை ரூ. 13 லட்சத்திற்கும், விஜய் சங்கரை ரூ. 10.25 லட்சத்திற்கு திருப்பூர் அணியும் எடுத்துள்ளது. சென்னை அணி பாபா அபரஜித்தை ரூ. 10 லட்சத்திற்கும் எடுத்துள்ளது. நெல்லை அணி, அஸ்வின் கிரிஸ்டை ரூ. 20 லட்சத்திற்கும், அருண் கார்த்திக்கை ரூ. 12 லட்சத்திற்கும் எடுத்தது. 

மதுரை அணி, அதிகபட்சமாக ஹரி நிஷாந்தை ரூ. 12.20 லட்சத்திற்கும், ஸ்வப்னில் சிங்கை ரூ. 12 லட்சத்திற்கும், வாஷிங்டன் சுந்தரை ரூ. 6.75 லட்சத்திற்கும், முருகன் அஸ்வினை ரூ. 6.40 லட்சத்திற்கும் எடுத்துள்ளது. சேலம் அணி, அதிகபட்சமாக அபிஷேக் தன்வரை ரூ. 13.20 லட்சத்திற்கும், கௌஷிக் காந்தியை 8.40 லட்சத்திற்கும் எடுத்துள்ளது. திண்டுக்கல் அணி அதிகபட்சமாக ஷிவம் சிங்கை ரூ. 15.95 லட்சத்திற்கும், சுபோத் குமாரை ரூ. 10.40 லட்சத்திற்கும், நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தியை ரூ. 6.75 லட்சத்திற்கும் எடுத்தது. 

டாப் 10 வீரர்கள்:

1. சாய் சுதர்சன் - லைகா கோவை கிங்ஸ் - ரூ. 21.60 லட்சம்

2. சஞ்சய் யாதவ் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - ரூ. 17.60 லட்சம்

3. ஷிவம் சிங் - திண்டுக்கல் டிராகன்ஸ் - ரூ. 15. 95 லட்சம்

4. சோனு யாதவ் - நெல்லை ராயல் கிங்ஸ் - ரூ. 15.20 லட்சம்

5. அபிஷேக் தன்வர் - சேலம் ஸ்பார்ட்ன்ஸ் - ரூ. 13. 20 லட்சம் 

6. சாய் கிஷோர் - திருப்பூர் தமிழன்ஸ் - ரூ. 13 லட்சம்

7. ஹரிஷ் குமார் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - ரூ. 12.90 லட்சம்

8. ஹரி நிஷாந்த் - மதுரை பாந்தர்ஸ் - ரூ. 12.20 லட்சம்

9. அருண் கார்த்திக் - நெல்லை ராயல் கிங்ஸ் - ரூ. 12 லட்சம்

10. சுவப்னில் சிங் - மதுரை பாந்தர்ஸ் - ரூ. 12 லட்சம் 

மேலும் படிக்க | IND vs AUS: இந்தியா வரல... கேப்டன் கம்மின்ஸ் திடீர் முடிவு - அதிர்ச்சியில் ஆஸ்திரேலியா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News