TNPL Auction 2023: இன்று டிஎன்பிஎல் ஏலம்..எங்கு? எப்படி பார்ப்பது?

TNPL Auction 2023 Streaming: இன்று மகாபலிபுரத்தில் நடைபெறும் தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2023 ஏலத்தை எப்போது, எங்கு பார்ப்பது என்பதை இங்கு அறிந்துக்கொள்ளுங்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 24, 2023, 12:57 PM IST
  • TNPL ஏல செயல்முறை எந்த நேரத்தில் தொடங்கும்?
  • TNPL ஏலம் எங்கு நடைபெறும்?
  • ஏலம் போன நட்சத்திர வீரர்கள்
TNPL Auction 2023: இன்று டிஎன்பிஎல் ஏலம்..எங்கு? எப்படி பார்ப்பது? title=

தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2023 ஏலம் இன்று மகாபலிபுரத்தில் நடக்கவிருக்கிறது. இதில் மொத்தம் 942 வீரர்கள் பங்கேற்றனர். ஏலத்தில் வீரர்களுக்கான அதிகபட்ச அடிப்படை விலை ரூ.10 லட்சம் என்றாலும், ரவிச்சந்திரன் அஸ்வின், நாராயண் ஜெகதீசன் மற்றும் ஷாருக்கான் போன்ற முக்கிய வீரர்கள் தங்கள் உரிமையாளர்களால் தக்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், டிஎன்பிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் நேற்று சென்னை மகாபலிபுரத்தில் தொடங்கிய நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் நடைபெறுகிறது. மொத்தம் 8 அணிகள் இத்தொடரில் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தலா ரூ. 70 லட்சம் வரை செலவிடலாம். ஏலத்தில் ஒரு அணி குறைந்தபட்சம் 16 வீரர்களையும் அதிகபட்சமாக 20 வீரர்கள் வரை தேர்வு செய்யலாம்.

மேலும் படிக்க | TNPL Auction: இந்த தமிழக வீரருக்கு அடித்தது ஜாக்-பாட்... ஐபிஎல்லை விட அதிக தொகை!

TNPL ஏல செயல்முறை எந்த நேரத்தில் தொடங்கும்?
இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு ஏலம் தொடங்கும்.

TNPL ஏலம் எங்கு நடைபெறும்?
TNPL ஏலம் மகாபலிபுரத்தில் நடைபெறவுள்ளது.

எந்த சேனல் ஏலத்தை ஒளிபரப்பும்?
ஏலத்தின் நேரடி ஒளிபரப்பை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் காணலாம்.

ஏலம் போன நட்சத்திர வீரர்கள்
வேகப்பந்துவீச்சாளரான நடராஜனை ரூ. 6.25 லட்சத்திற்கு திருச்சி அணி வாங்கியது. தொடர்ந்து, விஜய் சங்கரை ரூ. 10.25 லட்சத்திற்கு திருப்பூர் அணியும் எடுத்துள்ளது. சென்னை அணி, சஞ்சய் யாதவை ரூ. 17.60 லட்சத்திற்கும், பாபா அபரஜித்தை ரூ. 10 லட்சத்திற்கும் எடுத்துள்ளது. நெல்லை அணி, அஸ்வின் கிரிஸ்டை ரூ. 20 லட்சத்திற்கும், அருண் கார்த்திக்கை ரூ. 12 லட்சத்திற்கும் எடுத்தது. 

மதுரை அணி, அதிகபட்சமாக ஹரி நிஷாந்தை ரூ. 12.20 லட்சத்திற்கும், ஸ்வப்னில் சிங்கை ரூ. 12 லட்சத்திற்கும், வாஷிங்டன் சுந்தரை ரூ. 6.75 லட்சத்திற்கும், முருகன் அஸ்வினை ரூ. 6.40 லட்சத்திற்கும் எடுத்துள்ளது. சேலம் அணி, அதிகபட்சமாக அபிஷேக் தன்வாரை ரூ. 13.20 லட்சத்திற்கும், கௌஷிக் காந்தியை 8.40 லட்சத்திற்கும் எடுத்துள்ளது. 

திண்டுக்கல் அணி, ரவிச்சந்திரன் அஸ்வின் ரூ. 10 லட்சத்திற்கு தக்க வைத்த நிலையில், அதிகபட்சமாக ஷிவம் சிங்கை ரூ. 15.95 லட்சத்திற்கும், சுபோத் குமாரை ரூ. 10.40 லட்சத்திற்கும் எடுத்தது. அதேபோல, கோவை அணியும் ஷாருக்கானை ரூ. 6 லட்சம் கொடுத்து தக்கவைத்தது. அந்த அணி அதிகபட்சமாக சாய் சுதர்சனை ரூ. 21.60 லட்சம் கொடுத்து எடுத்தது. 

மேலும் படிக்க | தோனியின் அடுத்த சிஎஸ்கே கேப்டன் பிளான்..! பாதியில் செல்லும் பென் ஸ்டோக்ஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News