தோனி கோரிக்கையை நிராகரித்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்

புச்சிபாபு நினைவு தொடர் போட்டியில் ஜார்க்கண்ட் அணியை சேர்க்குமாறு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி கோரிக்கை விடுத்தபோதும் அதனை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நிராகரித்துள்ளது.    

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 11, 2023, 09:56 PM IST
  • தோனி வைத்த கோரிக்கை
  • நிராகரித்த தமிழ்நாடு
  • ஜார்க்கண்ட் அணி பரிதாபம்
தோனி கோரிக்கையை நிராகரித்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் title=

ரஞ்சி கோப்பை உள்ளிட்ட உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் தமிழ்நாடு அணி மோசமாக விளையாடி வருகிறது. இதனால் புச்சிபாபு நினைவு கிரிக்கெட் தொடரை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மீண்டும் நடத்துகிறது. 4 நாள் போட்டியாக நடைபெறும் இந்த தொடரில் பல்வேறு மாநில அணிகளும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. அதிகபட்சமாக 12 அணிகளுக்கு தொடரில் பங்கேற்க அனுமதி உண்டு.  வரும் 15ம் தேதி முதல் செப்டம்பர் 11ம் தேதி வரை நெல்லை, கோவை, சேலம், நத்தம் ஆகிய இடங்களில் நடக்கிறது. 

மேலும் படிக்க | டீம் இண்டியாவை வீழ்த்தி ODI உலகக்கோப்பையை பாகிஸ்தான் வெல்லும்! பாக் வீரர் கணிப்பு

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக சென்னை சேப்பாக்கம் மைதானம் தயார்படுத்தப்பட்டு வருவதால் முதல்முறையாக புச்சி பாபு கிரிக்கெட் சென்னைக்கு வெளியே நடத்தப்படுகிறது. மேலும், தமிழ்நாடு ப்ரீமியர் லீக் வருகையால் 6 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த இந்த போட்டி மீண்டும் நடத்தப்படுகிறது. 12 அணிகள் 4 பிரிவாக பிரிக்கெப்பட்டு விளையாடுகின்றன. ‘ஏ’ பிரிவில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் லெவன், இந்தியன் ரெயில்வே, திரிபுரா அணிகள் உள்ளன.

பி பிரிவில் ஹரியானா, பரோடா, மத்திய பிரதேசம் அணிகளும், சி பிரிவில் மும்பை, டெல்லி, ஜம்மு-காஷ்மீர் மற்றும் டி பிரிவில் கேரளா, பெங்கால் உள்ளிட்ட அணிகளும் இடம்பிடித்திருக்கின்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். நான்கு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

இதில் ஜார்க்கண்ட் அணியை சேர்க்குமாறு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தல தோனி கோரிக்கை விடுத்திருக்கிறார். ஆனால், அணிகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுவிட்டதால் தோனியின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க | சுரேஷ் ரெய்னாவை பின்பற்றுகிறாரா திலக் வர்மா? ஒப்பீடும் பல ஆச்சரியங்களும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News