இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவுக்கு வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் காயம் ஏற்பட்டது. உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியே சென்ற அவர், ஸ்கேனுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பரிசோதனையின் முடிவில் பெரிய அளவில் காயம் இல்லை என்றாலும் ஒரு வாரம் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனால் தர்மசாலாவில் நடைபெறும் நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் அவர் விளையாடமாட்டார். அவருக்கு பதிலாக இந்திய அணியில் யார் களமிறக்கப்படுவார்கள் என்பது கேப்டன் ரோகித் சர்மா கையில் இருக்கிறது. முகமது ஷமி, சூர்யகுமார் யாதவ், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் இந்த போட்டியில் இருக்கின்றனர்.
அதேபோல் ஷர்துல் தாக்கூரின் இடமும் கேள்விக்குறியாக இருக்கிறது. அவருடைய பந்துவீச்சு பெரிய அளவில் எடுபடவில்லை என்பதால் ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக முகமது ஷமியை அணியில் சேர்க்க வேண்டும் என்ற குரலும் வலுத்து வருகிறது. ஹர்திக் பாண்டியா வேகப்பந்துவீச்சு மற்றும் பேட்டிங் ஆல்ரவுண்டர் என்பதால் அவருக்கு மாற்றாக ஒரு பேட்ஸ்மேன் அல்லது வேகப்பந்துவீச்சாளரை கொண்டுவரவே கேப்டன் ரோகித் சர்மா விரும்புவார். அந்தவகையில் சூர்யகுமார் யாதவ் அல்லது முகமது ஷமி ஆகியோரில் ஒருவருக்கு நியூசிலாந்து அணிக்கு எதிரான பிளேயிங் லெவனில் வாய்ப்பு கொடுக்கப்படும். இவர்கள் இருவரில் யாருக்கு அதிக வாய்ப்பு என்று பார்த்தால் சூர்யகுமார் யாதவ் விளையாடுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.
ஏனென்றால் பினிஷர் மற்றும் அதிரடி ஆட்டக்காரர் என்ற வகையில் இந்திய அணிக்கு கூடுதல் பேட்ஸ்மேன் ஆப்சன் கிடைக்கும். பந்துவீச்சில் சிராஜ், பும்ரா, குல்தீப், ஷர்துல் ஆகியோர் இருக்கின்றனர். அவர்களை வைத்து பந்துவீச்சை எப்படியும் சமாளித்துவிடலாம் என்பது ரோகித் சர்மாவின் கணக்கு. கூடுதலாக ஒன்றிரண்டு ஓவர்கள் வீச வேண்டும் என்றால் கடந்த போட்டியில் விராட் கோலியை பயன்படுத்தியதைப் போல் அவரை சில ஓவர்கள் வீச வைத்துவிடலாம் என கணக்கு போட்டுள்ளார் ரோகித். ஏற்கனவே நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி 2003 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐசிசி தொடர்களில் வென்றதில்லை என்ற சோகம் தொடர்ந்து கொண்டிருப்பதால், அதற்கு முடிவுகட்ட வேண்டும் என தீர்க்கமாக இருக்கிறார். சுப்மான் கில் உடனான உரையாடலின்போது கூட இதனை இலைமறைக் காயாக பதில் கொடுத்திருந்தார்.
நியூசிலாந்து அணியில் பந்துவீச்சு செம ஸ்டிராங்காக இருக்கிறது. அதனை எதிர்கொள்ள வேண்டும் என்றால் இந்திய அணியில் வலுவான பேட்டிங் லைன் அப் இருக்க வேண்டும். அந்த அடிப்படையில் சூர்யகுமார் யாதவுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும். ஒருவேளை சூர்ய குமார் யாதவ் அணிக்குள் வரும்பட்சத்தில் ஷர்துல் தாக்கூரை நீக்கிவிட்டு முகமது ஷமியை மெயின் பவுலராகவும் கொண்டு வர வாய்ப்பு இருக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ