புதுடெல்லி: இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விலகியதையடுத்து, இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார். 2023 உலகக் கோப்பை வரை இந்திய அணியின் பயிற்சியாளராக டிராவிட் இருக்கிறார். டிராவிடின் வருகை பல வீரர்களின் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொடுத்திருக்கிறது. அதில் முக்கியமானவர் யார் தெரியுமா?
டி20 உலக கோப்பை போட்டி முடிந்தவுடன் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை ரவி சாஸ்திரி ராஜினாமா செய்தார். இதையடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார்.
டிராவிட்டின் உத்வேகத்தால், இந்தியா மீண்டும் ஐசிசி கோப்பையை வெல்லும் என்று பலரும் நம்புகின்றனர்.
டிராவிட் வந்தவுடன் அணிக்குள் வந்த வீரர்
ராகுல் டிராவிட் பயிற்சியாளராக வந்த பிறகுதான் டெஸ்ட் அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்ட இவர், தற்போது அணியில் நிரந்தர உறுப்பினராகியுள்ளார். மிடில் ஆர்டரில் இந்தியாவின் புதிய சக்தியாகக் கருதப்படும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு தான் நல்ல காலம் பிறந்திருக்கிறது.
நியூசிலாந்து தொடருக்கு முன்பு ஐயருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த தொடரில் தான் ராகுல் டிராவிட் இந்திய அணியின் நிரந்தர பயிற்சியாளராக பதவியேற்றுக் கொண்டார். அதன்பிறகு, இந்திய டெஸ்ட் அணியில் முதல்முறையாக ஸ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்பட்டார்.
ALSO READ | உத்தரக்காண்ட் அரசின் தூதுவராக ரிஷப் பந்த் நியமனம்
இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்ட ஐயர், தனது அறிமுகப் போட்டியில் முதல் இன்னிங்சில் சதமும், இரண்டாவது இன்னிங்சில் அரை சதமும் விளாசினார்.
நியூசிலாந்து தொடரின் போது பயிற்சியாளர் டிராவிட்டும் (Rahul Dravid) இந்த வீரர் மீது அதிக கவனம் செலுத்தினார். இது தவிர, பல முறை டிராவிட் ஐயரின் மோசமான ஷாட்டுக்காக திட்டவும் செய்தார்.
ஸ்ரேயாஸ் ஐயர் தற்போது அணியில் ஐந்தாவது இடத்திற்கான மிகப்பெரிய போட்டியாளராக மாறியுள்ளார். ஒரே ஒரு தொடரில் சிறப்பாக செயல்பட்டு, அஜிங்க்யா ரஹானே போன்ற ஒரு மூத்த வீரருக்கு போட்டியாக மாறியுள்ளார் ஷ்ரேயாஸ் ஐயர்.
பயிற்சியாளராக சாஸ்திரி
ரவி சாஸ்திரி பயிற்சியாளராக இருந்தபோது, இந்திய அணி ஆஸ்திரேலியாவை இரண்டு முறை வென்றது. அதேபோல, இங்கிலாந்து மண்ணிலும் டெஸ்ட் தொடரை வென்றது. ஆனால் இந்திய அணிக்காக ஒருமுறை கூட ஐசிசி பட்டத்தை பெற்றுத்தர முடியவில்லை.
இப்போது டிராவிட்டின் பயிற்சியில், இந்தியா (Team India) மீண்டும் ஒரு ஐசிசி போட்டியை வெல்லும் என்று நம்பப்படுகிறது.
ALSO READ | ’இந்த 3 நாள்....’ இந்திய வீரர்களுக்கு டிராவிட் சொன்ன முக்கிய அறிவுரை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR