Test Match England v India: இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது

இங்கிலாந்துக்கு எதிரான மகளிர் டெஸ்ட் போட்டி இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது. டெஸ்ட் போட்டியின் இறுதி நாளில் போட்டி டிராவில் முடிவடைந்தது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 21, 2021, 02:01 PM IST
Test Match England v India: இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது title=

இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான டெஸ்ட் போட்டி இறுதி நாளில் டிராவில் முடிந்தது, சிறப்பாக விளையாடிய ஷஃபாலி வர்மா ஆட்ட நாயகராக அறிவிக்கப்பட்டார்.

இங்கிலாந்துக்கு எதிரான மகளிர் டெஸ்ட் போட்டி இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது.  அறிமுக வீராங்கனைகளான ஸ்னே ராணா (Sneh Rana) மற்றும் டானியா பாட்டியா ஆகியோர் ஆட்டமிழக்காமல் 108 ரன்கள் எடுத்தனர். அதனால் தான் இந்திய அணி தோல்வியை தவிர்த்து, போட்டியை டிரா செய்ய முடிந்தது.

தொடக்க வீராங்கனைகளான தீப்தி ஷர்மா 168 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார், ஸ்னே ராணா 154 பந்துகளை எதிர்கொண்டு ஆட்டமிழக்காமல் 80 ரன்கள் எடுத்தார். ஷிகா பாண்டே மற்றும் பாட்டியா (44  நாட் அவுட்) என்ற கூட்டணி இங்கிலாந்து பந்து வீச்சை எதிர்கொண்டது.  

Also Read | WTC: இந்தியாவின் ஆட்டத்தைப் பார்த்து யூடர்ன் அடித்த மைக்கேல் வாகன்

இறுதியில் இரு அணிகளும் 121.2 ஓவர்களுக்குப் பிறகு போட்டியை டிரா செய்ய முடிவு செய்தன.

முதல் இன்னிங்சில் 231 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஷஃபாலி வர்மா 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.  அவரையடுத்து களம் இறங்கிய ஷர்மா, புனம் ரவுத் (39) உடன் கைகோர்த்து 72 ரன்கள் சேர்த்தார்.

இதனிடையில் இந்தியாவுக்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான ஆட்வர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி (IND vs NZ) இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில் தொடர்கிறது.

Also Read | WTC Final,Ind vs NZ: வெற்றிபெறும் அணிக்கு கிடைக்கப்போகும் பரிசுத்தொகை எவ்வளவு?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News