புதுடெல்லி: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கான்பூரில் நாளை அதாவது நவம்பர் 25 வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுலுக்கு காயம் ஏற்பட்டதையடுத்து, அணியை தேர்ந்தெடுப்பதில் புதிய சிக்கல் எழுந்துள்ளது.
டெஸ்ட் தொடருக்கு முன்பே ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், டீம் இந்தியாவின் தொடக்க வீரர்களை உருவாக்குவது மிகப்பெரிய சிக்கலாக இருக்கும். நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணியில் இடம்பெறக்கூடிய வீரர்களும், சாத்தியக்கூறுகளையும் பற்றிய அனுமானங்கள் இவை:
தொடக்க ஆட்டக்காரர்கள்
மயங்க் அகர்வால் மற்றும் சுப்மான் கில் ஆகியோர் நியூசிலாந்துக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் இறங்க உள்ளனர். இந்த இரண்டு பேட்ஸ்மேன்களும் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்காக (IND VS NZ) ஓபன் ஆக உள்ளனர். முதல் டெஸ்டில் காயம் காரணமாக விலகியுள்ள கேஎல் ராகுலுக்கு பதிலாக மயங்க் அகர்வால் களமிறங்குகிறார். டெஸ்ட் தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ள ரோஹித் சர்மாவுக்கு பதிலாக சுப்மான் கில் முதல் டெஸ்டில் விளையாடுவார்.
ALSO READ | இந்திய அணிக்கு பின்னடைவு: நியூசிலாந்து தொடரில் இருந்து முக்கிய வீரர் விலகல்
மிடில் ஆர்டர் (middle order)
சேதேஷ்வர் புஜாரா 3வது இடத்தில் விளையாடுவார். நான்காம் இடத்தில் உள்ள விராட் கோலிக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி விளையாடுவார்.
அஜிங்க்யா ரஹானே 4-வது இடத்தில் பேட்டிங் செய்ய வருவார். சிறப்பாக செயல்பட வேண்டிய அழுத்தம் ரஹானேவுக்கு இருக்கும். நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கோஹ்லிக்குப் பதிலாக ரஹானே கேப்டனாக இருப்பார்.
விருத்திமான் சாஹா - விக்கெட் கீப்பர்
பேட்ஸ்மேன் விருத்திமான் சாஹா 6வது இடத்திற்கு தேர்வு செய்யப்படுவார் என்று உறுதியாக சொல்லலாம். அவரே விக்கெட் கீப்பராகவும் (Wicketkeeper batsman) இருப்பார். முதல் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்துக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு 7வது இடத்தில் வாய்ப்பு நிச்சயம் என்றே சொல்லலாம். ரவீந்திர ஜடேஜா சுழற்பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் சிறப்பாக இருப்பது அணிக்கு பலம் ஆகும்.
சுழற்பந்து வீச்சாளர்களர்கள்
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களாக, ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் இடது கை சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் ஆகியோர் களத்தில் இறக்கப்படலாம்.
வேகப்பந்து வீச்சாளர்கள்
வேகப்பந்து வீச்சாளர்களாக, முகமது சிராஜ், உமேஷ் யாதவ் ஆகியோர் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் களம் இறக்கப்படலாம்.
READ ALSO | பயிற்சி பணத்தை வெள்ள நிவாரணமாக வழங்கிய கிரிக்கெட் வீரர்
இது நியூசிலாந்திற்கு எதிரான இந்தியாவின் விளையாடும் உத்தேச இந்திய அணி (Team India) ...
சுப்மன் கில்
மயங்க் அகர்வால்
சேதேஷ்வர் புஜாரா
ஷ்ரேயாஸ் ஐயர்
அஜிங்க்யா ரஹானே (கேப்டன்)
விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்)
ரவீந்திர ஜடேஜா
அக்சர் படேல்
ஆர் அஸ்வின்
முகமது சிராஜ்
உமேஷ் யாதவ்
இந்தியா vs நியூசிலாந்து தொடர் முழு அட்டவணை
2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்
1. 1வது டெஸ்ட் போட்டி - 25-29 நவம்பர் 2021 - கான்பூர் - காலை 9:30
2. 2வது டெஸ்ட் போட்டி - 3-7 டிசம்பர் 2021 - மும்பை - காலை 9:30
ALSO READ | உணவு சுதந்திரத்தில் தலையிட BCCI-க்கு உரிமை இல்லை.. வலுக்கும் எதிர்ப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR