T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்தியாவிடம் நியூசிலாந்து தோற்றதில்லை!

India vs New Zealand, T20 World Cup: டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்து இதுவரை இந்தியாவிடம் தோற்றதில்லை. 2003 உலகக் கோப்பைக்குப் பிறகு, இதுவரை எந்த ஐசிசி போட்டியிலும் இந்திய அணியால் நியூசிலாந்தை வீழ்த்த முடியவில்லை.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 31, 2021, 06:57 PM IST
  • எந்த ஐசிசி போட்டியிலும் இந்திய அணியால் நியூசிலாந்தை வீழ்த்த முடியவில்லை.
  • 2016 டி20 உலகக் கோப்பையிலும் இந்திய அணி தோல்வியடைந்தது.
  • உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்தியா தோற்கடிக்கப்பட்டது.
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்தியாவிடம் நியூசிலாந்து தோற்றதில்லை! title=

India vs New Zealand, T20 World Cup: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2021 இன் தொடக்க ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானிடம் தோற்ற பிறகு, இன்று (ஞாயிற்றுக்கிழமை - அக்டோபர் 31) ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் நடைபெறும் இரண்டாவது சூப்பர் 12 ஆட்டத்தில் இந்தியா நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. கிவீஸ் அணியும் (New Zealand Team) தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோற்றது.

இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால், அரையிறுதி உறுதி செய்யப்படுமா என்றால், கிடைக்காது, ஆனால் தோல்வி அடைந்தால் அரையிறுதியில் நுழைவதற்கான வாய்ப்பு பாதிக்கப்படும். 

நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய 16 டி20 சர்வதேசப் போட்டிகளில் இந்தியா 6 வெற்றி, 8 தோல்வி அடைந்துள்ளது. இரண்டு போட்டி சமநிலையில் முடிந்துள்ளது. 

டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்து இதுவரை இந்தியாவிடம் தோற்றதில்லை. 2003 உலகக் கோப்பைக்குப் பிறகு, இதுவரை எந்த ஐசிசி போட்டியிலும் இந்திய அணியால் நியூசிலாந்தை வீழ்த்த முடியவில்லை.

ALSO READ |  இந்திய அணியின் பேட்ஸ்மேன்களை திணறடிக்க தயாராகும் ட்ரெண்ட் போல்ட்!

2007ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. இதற்குப் பிறகு, 2016 டி20 உலகக் கோப்பையிலும் இந்திய அணி தோல்வியடைந்தது.

இது தவிர, 2019 ஆம் ஆண்டில், 50 ஓவர் உலகக் கோப்பையில் இரு அணிகளுக்கு இடையிலான ஒரு போட்டி முடிவு பெறவில்லை. அதே உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது.

இவ்விரு அணிகளுக்கும் கடைசியாக பிப்ரவரி 2, 2020 அன்று மவுண்ட் மவுங்கானுயில் நடந்த ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் இறுதிப் போட்டியில் மோதின. மேலும் இந்த ஆட்டத்தில் இந்தியா ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டி20 சர்வதேசப் போட்டிகளில் இந்தியா-நியூசிலாந்து விவரம்:

இந்தியாவில் இரு அணிகளும் 5 போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில் இந்தியா 2-ல் வெற்றியும், நியூசிலாந்து 3-ல் வெற்றியும் பெற்றுள்ளது.

ALSO READ |  நியூசிலாந்துக்கு எதிராக வெற்றி பெற்று தருவாரா இந்திய அணியின் வீரர்

அதேபோல நியூசிலாந்தில் இரு அணிகளும் 10 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இந்தியா 4-ல் வெற்றியும், நியூசிலாந்து 4-ல் வெற்றியும் பெற்றுள்ளது. இரண்டு போட்டிகள் "டை" ஆனது.

தென் ஆப்பிரிக்கா மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஒரு ஆட்டத்தில் மோதியுள்ளன. அதில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. 

உலகக் கோப்பையில் இரு அணிகளும்: 

உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இரண்டு முறை நேருக்கு நேர் மோதின. இரண்டு போட்டியிலும் நியூசிலாந்து வெற்றி பெற்றுள்ளது. 

இரு அணிகளின் அதிகபட்ச ரன்கள்: 

10-02-2019 அன்று ஹாமில்டனில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது. 

06-02-2019 அன்று வெலிங்டனில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் அடுத்தது.

ALSO READ |  வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி!

இரு அணிகளின் குறைந்தபட்ச ரன்கள்:

இந்தியா: 
15-03-2016 அன்று நாக்பூரில் நடந்த 18.1 ஓவரில் 79 ஆல் அவுட் ஆனது.

நியூசிலாந்து: 
15-03-2016 அன்று நாக்பூரில் நடந்த 20 ஓவர்களில் 126/7

தனிப்பட்ட வீரரின் அதிகபட்ச ரன்கள்:

இந்தியா:
01-11- 2017 அன்று டெல்லியில் ரோஹித் சர்மாவின் 80; 
01-11- 2017 அன்று டெல்லியில் ஷிகர் தவான் 80;

நியூசிலாந்து: 
04-11-2017 அன்று ராஜ்கோட்டில் காலின் முன்ரோவால் ஆட்டமிழக்காமல் 109 ரன்கள் எடுத்தார்.

சிறந்த பந்துவீச்சு:

இந்தியா: 
02-02-2020 அன்று மவுண்ட் மவுங்கானுயில் ஜஸ்பிரித் பும்ராவால் 3/12;

நியூசிலாந்து:
15-03-2016 அன்று நாக்பூரில் மிட்செல் சான்ட்னர் 4/11

ALSO READ |  விராட் கோலியின் சாதனையை முறியடித்த பாகிஸ்தான் கேப்டன்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News