ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் இந்திய அணிக்குள் வரப்போகும் வீரர் இவரா?

வங்கதேசம் அணிக்கு எதிரான உலக கோப்பை போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக வெளியேறியுள்ளார். அவரின் காயத்தை பொறுத்து அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடுவாரா? இல்லையா? என்பது தெரியவரும்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 19, 2023, 05:14 PM IST
  • ஹர்திக் பாண்டியா திடீர் காயம்
  • மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்
  • ஒரு சில வாரங்கள் ஓய்வு எடுப்பார் என தகவல்
ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் இந்திய அணிக்குள் வரப்போகும் வீரர் இவரா? title=

உலக கோப்பை லீக் போட்டியில் இந்தியா - வங்கதேசம் அணிகள் புனேவில் விளையாடுகின்றன. இந்தப் போட்டியில் ஹர்திக் பாண்டியா காயமடைந்துள்ளார். பந்துவீசும்போது காலை வைத்தை பீல்டிங் செய்ய முயற்சித்ததால் பிட்சுக்கு நடுவிலேயே கீழே விழுந்தார். இதில் அவருடைய கால் பகுதியில் காயமடைந்ததாக தெரிகிறது. கீழே விழுந்த உடனே வலியால் துடித்த அவரை இந்திய அணியின் பிஸியோதெரபிஸ்ட் பரிசோதனை செய்து உடனடியாக மைதானத்துக்கு வெளயே அழைத்துச் சென்றார். அவருக்கு ஸ்கேன் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹர்திக் பாண்டியா ஏற்கனவே காயத்துடன் இருந்து வந்தார். சிறிய அளவிலான ரத்த உறைவு அவருக்கு காலில் இருந்தது. பயப்படும்படியான அளவுக்கு அது இல்லாத காரணத்தால் கடந்த 3 போட்டிகளிலும் இந்திய அணிக்காக களம் கண்டார். ஆனால் வங்கதேசம் அணிக்கு எதிரான இப்போட்டியில் துருதிஷ்டவசமாக காயத்தில் சிக்கியுள்ளார். 

மேலும் படிக்க | ஹர்திக் பாண்டியாவுக்கு காயம்... இந்தியாவுக்கு பெரிய சிக்கல் - பந்துவீசிய விராட் கோலி!

மைதானத்தில் இருந்து வெளியே சென்ற ஹர்திக் பாண்டியா மீண்டும் மைதானத்துக்கு வரவே இல்லை. அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் பீல்டிங் செய்ய களத்துக்கு வந்தார். காயத்தின் தன்மை பொறுத்து தான் அவர் பேட்டிங் செய்வாரா? என்ற முடிவை இந்திய அணி எடுக்கும். இப்போதைய சூழலில் ஹர்திக் பாண்டியாவின் காயம் இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஒருவேளை காயத்தின் தன்மை அதிகமாக இருந்தால் அடுத்த இரண்டு மூன்று போட்டிகளுக்கு அவர் விளையாட முடியாமலும் போகலாம். இது நடப்பு உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாகவும் அமையும். அதேநேரத்தில் அவருக்கு ஈடான மாற்று வீரர் அணிக்கு தேவைப்படுவார். அதற்கு ஏற்கனவே பிளேயிங் லெவனில் இடம் கிடைக்காமல் இருக்கும் சூர்ய குமார் யாதவ் இந்திய அணியில் இடம் பிடிக்க வாய்ப்பு அதிகம். 

சூர்யகுமார் யாதவும் தற்போது சூப்பர் பார்மில் இருக்கிறார். ஆனால் சரியான காம்பினேஷன் மற்றும் வீரர்கள் அனைவரும் பார்மில் இருப்பதால் தான் உலக கோப்பைக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அவர் விளையாட முடியாமல் உள்ளது. இப்போது, ஒரு வாய்ப்பு சூர்யகுமாருக்கு கிடைத்திருக்கிறது. அவருக்கு அடுத்தபடியாக ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக முகமது ஷமியை பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் என்று பலமான கோரிக்கையை பலரும் முன்வைத்துள்ளனர். இந்திய அணியும் இதனை பரிசீலித்தாலும், பேட்டிங் மற்றும் ஆல்ரவுண்டர் என்ற ஆப்சனில் ஷர்துல் தாக்கூர் ஒரு படிமேலே இருப்பதால் அவருக்கு இந்திய அணி நிர்வாகம் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. 

இருப்பினும் அடுத்தடுத்த போட்டிகளில் ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக முகமது ஷமி களமிறங்கும் வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது. இதுவரை விளையாடிய போட்டிகளில் இஷான் கிஷனுக்கு பதிலாக சுப்மன் கில்லை இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மாற்றம் செய்ததை வேறு எந்த பெரிய மாற்றமும் இதுவரை இல்லை. ஆனால் வரும் உலக கோப்பை போட்டிகளில் இந்த இரு மாற்றம் இந்திய அணியில் எதிர்பார்க்கலாம்.  

மேலும் படிக்க | Virat Kholi Bowling: பந்தே வீசாமல் விக்கெட் எடுத்த ஒரே பவுலர் விராட் கோலி தான்..! தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News