தல எம்.எஸ். தோனி தான் இந்தியாவின் சிறந்த கேப்டன்: சுரேஷ் ரெய்னா

இந்தியாவுக்கு கிடைத்த கேப்டன்களில் சிறந்த கேப்டன் மகேந்திர சிங் தோனி தான் என்று தான் நினைப்பதாக சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 13, 2020, 04:42 PM IST
தல எம்.எஸ். தோனி தான் இந்தியாவின் சிறந்த கேப்டன்: சுரேஷ் ரெய்னா title=

சென்னை: மகேந்திர சிங் தோனி தான் இந்தியாவுக்கு கிடைத்த சிறந்த கேப்டன் என்று தான் நம்புவதாக மூத்த பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

தோனியின் கீழ் 2011 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் ஒரு பகுதியாக இருந்த ரெய்னா, முன்னாள் பல கேப்டனின் கீழ் தனது கிரிக்கெட்டில் பெரும்பகுதியை விளையாடியுள்ளார்.

2020 இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL - ஐபிஎல்) தொடரில் தோனி மீண்டும் கிரிக்கெட் விளையாடுவதற்கு திரும்புவதை அனைவரும் காணலாம். ஏனெனில் 2019 கிரிக்கெட் உலகக் கோப்பையின் அரையிறுதியில் நியூசிலாந்திடம் இந்தியா தோல்வியடைந்ததில் இருந்து, இந்திய அணியின் விக்கெட் கீப்பர் எம்.எஸ். தோனி இடைவெளியில் இருக்கிறார். அதன் பிறகு அவர், எந்த சர்வதேச போட்டியிலும் விளையாடவில்லை. நடக்க உள்ள ஐபிஎல் 2020 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே - CSK) அணிக்காக விளையாட உள்ளார். சிஎஸ்கே இராணுவத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக ரெய்னாவும் இருப்பார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமில் சேனலில் வரும் "தி சூப்பர் கிங்ஸ் நிகழ்ச்சி"யில் பேசிய ரெய்னா, "எதையும் செய்ய முடியும் என இந்திய அணியை மாற்றிய சிறந்த கேப்டன் எங்களிடம் இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். இப்போதும் எங்கள் டிரஸ்ஸிங் ரூமில் அதே ஒளி உள்ளது" என்றார்.

இந்த சீசனில் சிஎஸ்கே தங்கள் சொந்த மைதானத்தில் விளையாடும்போது அரங்கம் முழுவதும் நிரம்பி இருக்கும். மேலும் சிஎஸ்கே விளையாடும் ஒவ்வொரு சென்னை போட்டியிலும் அரங்கத்தை நிரப்புமாறு சின்ன தல ரசிகர்களை கேட்டுக்கொண்டார். இப்போது எங்களுக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனால் களத்தில் அதிக ஆற்றல் இருக்கும் என்று ரெய்னா கூறினார்.

சி.எஸ்.கே. அணியில் விளையாடுவது குறித்து ரெய்னா தனது உற்சாகத்தை வெளிப்படுத்தியதோடு, "இந்த ஆண்டு எங்கள் அணியில் நிறைய புதிய திறமைகள் உள்ளன. பியூஷ் இருக்கிறார், பின்னர் எங்களிடம் ஹேசல்வுட், சாம் குர்ரான், தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் கிஷோர், இவர் அருமையாக பந்து வீசுகிறார். எங்கள் அணிக்கு மிகவும் நல்லது. நாங்கள் இளைஞர்கள் மற்றும் மூத்த வீரர்கள் அவன்கிய கலவையை அணியில் வைத்திருக்கிறோம் என்று நினைக்கிறேன்" என்றார்.

Trending News