கே.எல். ராகுலின் திருமணம் எப்போது?

கே.எல். ராகுலுக்கும் தனது மகளுக்கும் எப்போது திருமணம் நடக்கும் என்பது குறித்து நடிகர் சுனில் ஷெட்டி பேசியுள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : May 12, 2022, 07:08 PM IST
  • கே.எல். ராகுல், அத்தியா காதல்
  • ராகுல், அத்தியா திருமணம் குறித்து சுனில் ஷெட்டி விளக்கம்
கே.எல். ராகுலின் திருமணம் எப்போது?  title=

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல். ராகுல். இவர் ஐபிஎல்லில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு கேப்டனாக சிறப்புடன் செயல்பட்டுவருகிறார்.

இவரும், நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அத்தியாவும் கடந்த சில வருடங்களாக காதலித்துவருகின்றனர். ஆனால் இவர்களது திருமணம் எப்போது என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளிவரவில்லை.

இந்நிலையில் ராகுல் - அத்தியா திருமணம் எப்போது என்பது குறித்து அத்தியாவின் தந்தை சுனில் ஷெட்டியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

Rahul

அப்போது பேசிய அவர், “கே.எல். ராகுலை எனக்கு பிடிக்கும். எனது மகள் எப்படி இருந்தாலும் ஒரு நேரத்தில் திருமணம் செய்துதான் ஆக வேண்டும். அவர்கள் இருவருக்கும் விரைவாக திருமணம் நடைபெற்றால் சிறப்பாக இருக்கும். 

மேலும் படிக்க | KKR அணியை விட்டு விலகும் பிரெண்டன் மெக்கலம்

இருந்தாலும் அது அவர்களுடைய விருப்பம்தான். அவர்களது எனது ஆசீர்வாதம் எப்போதும் இருக்கும்ராகுலும், அத்தியாவும் எந்த முடிவு எடுத்தாலும் கவலை இல்லை” என்றார்.

மேலும் படிக்க | ஐபிஎல் போட்டி மூலம் ரஷித்கானை தேடி வந்த கவுரவம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News