ஆசிய கோப்பை: ரோகித்தின் டைரக்ஷனில் ஹீரோவான சிராஜ் - இந்திய அணி 8வது முறையாக மகுடம்

ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் முகமது சிராஜ் அபார பந்துவீச்சில் இந்திய அணி இலங்கை அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 8வது முறையாக மகுடம் சூடியது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 17, 2023, 06:26 PM IST
  • ஆசிய கோப்பை சாம்பியனான இந்தியா
  • 8வது முறையாக மகுடம் சூடி அசத்தல்
  • கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் சாதனை
ஆசிய கோப்பை: ரோகித்தின் டைரக்ஷனில் ஹீரோவான சிராஜ் - இந்திய அணி 8வது முறையாக மகுடம் title=

ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி 8வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்த மெகா  வெற்றியை பெற்றிருக்கிறது. இதற்கு முழுக்க முழுக்க காரணம் இந்திய அணியின் வேக பந்துவீச்சாளர் முகமது சிராஜ் தான். அவர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை அணியை நிலைகுலைய வைத்துவிட்டார். அதனால் 6 மணி நேரம் நடைபெற வேண்டிய போட்டி வெகு சீக்கிரமே முடிந்துவிட்டது. 

 

முகமது சிராஜ் அபாரம்

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை இறுதிப் போட்டி கொழும்புவில் இருக்கும் பிரபலமான மைதானமான பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டிக்கு மழை அச்சுறுத்தல் இருக்கும் என வானிலை தகவல் தெரிவித்த நிலையில் அதனைப் போலவே போட்டி அரைமணி நேரம் தாமதமாக தொடங்கியது.

ஆனால், அதன்பிறகு முகமது சிராஜ் புயல் வீசும் என யாரும் கணிக்கவில்லை. முதல் ஓவரில் இருந்தே இலங்கை அணியின் டாப் ஆர்டர்களுக்கு தலைவலியாக இருந்த அவர், ஒரே ஓவரில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி பிரமிக்க வைத்தார். 6 ஓவர்கள் வீசிய அவர் மொத்தம் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை சாய்த்தார். 

மேலும்படிக்க | IND vs SL: கொழும்புவை தாக்கிய சிராஜ் புயல்... சின்னாபின்னமான இலங்கை அணி!

இலங்கை அணி பரிதாபம்

முடிவில் இலங்கை அணி 50 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. அதிலும் 6 ரன்கள் ஓவர்த்ரோவில் கிடைத்தது. இவ்வளவு குறைவான ரன்களுக்கு ஆல்அவுட்டாகும் இலங்கை என யாரும் என எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு எதிராக இலங்கை அணி சாம்பியன் ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்கள். அதனால் இலங்கை அணி இந்திய அணிக்கு செம போட்டியை கொடுக்கும் என்று தான் எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், சிராஜின் புயல்வேகத்தில் இப்படி சுருண்டுபோவார்கள் என இலங்கை ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை. 

இந்திய அணி அபார வெற்றி

இதனையடுத்து சேஸிங்கை தொடங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா ஓப்பனிங் இறங்கவில்லை. அவருக்கு பதிலாக இஷான் கிஷன் சுப்மான் கில்லுடன் ஓப்பனிங் இறங்கினார். இருவரும் விக்கெட் விழாமல் அதேநேரத்தில் சிறப்பாக ஆடி வெற்றி இலக்கை எட்டினர். அவர்களின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.

இந்த வெற்றியானது இந்திய அணிக்கு ஒருநாள் போட்டியில் பெற்ற மிகச் சிறப்பான வெற்றியாகவும் பதிவாகியிருக்கிறது. அதாவது, அதிக பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்றதில் இலங்கை அணிக்கு எதிரான ஆசிய கோப்பை இறுதிப் போட்டி அமைந்திருக்கிறது. இப்போட்டியில் இந்திய அணி 263 பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்றிருக்கிறது. 

மேலும்படிக்க | முகமது சிராஜ்: பிரேமதாசாவில் ராசாவாக ஜொலித்த சிராஜ் - விராட் கோலி ரியாக்ஷன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News