தென்னாப்பிரிக்காவுக்கு பெரும் பின்னடைவு!! முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் விலகல்

தென்னாப்பிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் காயம் காரணமாக உலக கோப்பை தொடரில் இருந்து விலகல்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jun 4, 2019, 05:18 PM IST
தென்னாப்பிரிக்காவுக்கு பெரும் பின்னடைவு!! முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் விலகல் title=

இங்கிலாந்து: மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள உலக கோப்பை கிரிக்கெட் 2019 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை ஆடிய இரண்டு போட்டிகளிலும் தோ;தோல்வியை சந்தித்து உள்ள தென்னாப்பிரிக்க அணிக்கு மேலும் பெரும் பின்னடைவு ஏற்ப்பட்டு உள்ளது.

நாளை ரோஸ் பவுல் மைதானத்தில் மாலை 3 மணிக்கு நடக்க உள்ள போட்டியில் பலம்பலம் வாய்ந்த இந்திய அணியை எதிர்க் கொள்கிறது தென்னாப்பிரிக்க அணி. ஏற்கனவே உலகக்கோப்பை தொடரில் தனது முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியிடம் 104 ரன்கள் வித்தியாசத்திலும், 2வது போட்டியில் வங்கதேச அணியிடம் 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தொடர் தோல்விகளில் துவண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளது

இந்தநிலையில், தென்னாப்பிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் காயம் காரணமாக உலக கோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு பதிலாக ஹென்ரிக்ஸ் சேர்க்கப்பட்டு உள்ளார்.

ஏற்கனவே காயம் காரணமாக அணியின் வேகப்பந்து வீச்சாளர் நிகிடி இந்திய அணிக்கு எதிராக நடைபெற உள்ள ஆட்டத்தில் ஆட மாட்டார் என அறிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News