சர்வதேச கிரிக்கெடிலிருந்து ஷாஹித் அஃப்ரிடி ஓய்வு

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர் ஷாகித் அஃப்ரிடி அறிவித்துள்ளார்.

Last Updated : Feb 20, 2017, 08:46 AM IST
சர்வதேச கிரிக்கெடிலிருந்து ஷாஹித் அஃப்ரிடி ஓய்வு title=

புதுடெல்லி: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர் ஷாகித் அஃப்ரிடி அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான ஷாஹித் அஃப்ரிடி. இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆல்ரவுண்டரான அஃப்ரிடி ஏற்கனவே ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்றுவிட்டார். எனினும், டி-20 போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடி வந்தார்.

கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை டி-20 போட்டிகளில், பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்தார். உலக கோப்பை தொடர் நிறைவுற்றதும் கேப்டன் பதவியை ராஜினாமா செய்த ஷாஹித் அஃப்ரிடி.

இந்நிலையில், சர்வதேச டி-20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். எனவே, அவரது 21 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததுள்ளது. 

Trending News