சர்ப்ராஸ் நீக்கப்பட்டதற்கு வேறு யாரும் காரணம் இல்லை -அக்தர்!

பாகிஸ்தான் கேப்டன் பதவியில் இருந்து சர்ப்ராஸ் நீக்கப்பட்டதற்கு வேறு யாரும் காரணம் இல்லை என ஷோயப் அக்தர் வலியுறுத்தியுள்ளார்.

Last Updated : Oct 20, 2019, 03:21 PM IST
சர்ப்ராஸ் நீக்கப்பட்டதற்கு வேறு யாரும் காரணம் இல்லை -அக்தர்! title=

பாகிஸ்தான் கேப்டன் பதவியில் இருந்து சர்ப்ராஸ் நீக்கப்பட்டதற்கு வேறு யாரும் காரணம் இல்லை என ஷோயப் அக்தர் வலியுறுத்தியுள்ளார்.

"இந்த நிலைமை சர்பராஸுக்கு வரும் என நான் யூகித்தேன். அவரைத் தவிர வேறு யாரையும் இந்த விஷயத்தில் குறை சொல்ல வேண்டியதில்லை. இரண்டு வருடங்களாக அவரது சாக்ஸை இழுக்குமாறு நான் வலியுறுத்தி வந்தேன்" என்று அக்தர் வெள்ளிக்கிழமை தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சர்ப்ராஸ்., வரவிருக்கும் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கான பாகிஸ்தான் அணியில் இருந்தும் நீக்கப்பட்டார். இந்த தொடரில் பாகிஸ்தான் மூன்று டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அன அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இலங்கை அணியுடனான டி20 உள்ளூர் தொடரில் பாகிஸ்தான் படு தோல்வி கண்ட நிலையில் சர்ப்ராஸ் பதவி அதிரடியாக பறிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இதுகுறித்து தனது யூடியூப் சேனலின் வாயிலாக கருத்து தெரிவித்த அக்தர், "ஏற்பட்ட சூழ்நிலை அவரது சொந்த தவறுனால் உண்டானது. அது வேறு ஒருவரின் தவறு அல்ல" என குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் "அவரை அணியில் கூட வைத்திருக்க மாட்டார்கள் என்பதையும் நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். இப்போதே என்னால் உத்தரவாதம் அளிக்க முடியும். அவர்கள் அவருக்கு அணியில் ஒரு வாய்ப்பையும் வழங்க மாட்டார்கள்" என்று அக்தர் குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து பேசிய ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் சர்ப்ராஸ் அகமதுவை ஒரு 'பயமுறுத்தும்' கேப்டன் என்றும் விமர்சித்துள்ளார்.

"கடந்த இரண்டு ஆண்டுகளாக நாங்கள் அவரை பார்த்துக்கொண்டிருக்கிறோம், அவரது நிதானமான மனநிலையும் ஆக்ரோஷமான பேட்டிங்கும் எங்கு சென்றது." என மேலும் கேள்வி எழுப்பியுள்ளார் அக்தர். 

முன்னதாக, 2019-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பையில் பாகிஸ்தானின் மோசமான செயல்திறனைத் தொடர்ந்து, அக்தர், சர்பராஸை தனது விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் திறமைக்காக அணியில் வைக்க வேண்டும் என்றும், ஆனால் கேப்டனாக தொடர அனுமதிக்க வேண்டாம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

பின்னர், உலகக் கோப்பையின் ரவுண்ட்-ராபின் கட்டத்தில் இந்தியாவை பாகிஸ்தான் தோற்கடித்ததைத் தொடர்ந்து 32 வயதான சர்ப்ராஸூ "மூளை இல்லாத கேப்டன்" என்றும் 'ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்' அழைத்தது குறிப்பிடத்தக்கது.

Trending News