இந்திய கிரிக்கெட்டின் முகமாக இருந்தவர் சச்சின். சச்சினுக்கு நெருங்கிய நண்பரான வினோத் காம்ப்ளியும் ஒரு கிரிக்கெட் வீரர். சச்சினும், காம்ப்ளியும் இணைந்து தங்களது பள்ளி கால போட்டி ஒன்றில் 789 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததன் மூலம் உலகிற்கு தெரியவந்தனர்.சச்சினுக்கு பிறகு வினோத் காம்ப்ளி இந்திய அணிக்குள் வந்தார். அணிக்குள் நுழைந்த புதிதில் சச்சின் அளவுக்கு முழு ஃபார்மில் இருந்தார். பல போட்டிகளை வென்றும் கொடுத்தார். முதல் 7 டெஸ்ட் போட்டிகளில் 793 ரன்களை 113.29 என்ற சராசரியில் எடுத்தார் வினோத் காம்ப்ளி. இதில் இரண்டு இரட்டைச்சதங்களும் அடங்கும்.
1996 உலகக் கோப்பையில் இலங்கைக்கு எதிரான அரையிறுதியில் மைதானத்தில் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட அந்தப் போட்டி நோ-ரிசல்ட் என்று முடிந்தது. அந்தப் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டதால் மைதானத்தில் நின்றுகொண்டு வினோத் காம்ப்ளி அழுதது கிரிக்கெட் உலகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஒருகட்டத்தில் வினோத் காம்ப்ளியின் நடவடிக்கைகள் திசை மாற அவருக்கு பிசிசிஐயின் கதவு நிரந்தரமாக மூடப்பட்டது. இந்நிலையில் வினோத் காம்ப்ளியின் தற்போதைய நிலைமை அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பேட்டி ஒன்றில் பேசிய அவர், “ நான் ஒரு ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர் இன்று என் வாழ்வாதாரம் பிசிசிஐ கொடுக்கும் ரூ.30,000 மட்டுமே. அதற்காக இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இது என் குடும்பத்தை கவனிக்கப்போதுமானதாக உள்ளது.
மேலும் படிக்க | ஜிம்பாப்வேவுக்கு எதிரான தொடர் - இளம் வீரர் ஷாபாஸுக்கு வாய்ப்பு
என்னை பயன்படுத்திக் கொள்ளலாம், இளம்வீரர்களுடன் பணியாற்ற விரும்புகிறேன். அமோல் மஜூம்தாரை மும்பை ஹெட் கோச்சாக வைத்துள்ளது.எங்காவது தேவைப்பட்டால் நானும் வருகிறேன். மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் உதவி கேட்டிருக்கிறேன். கிரிக்கெட் இம்ப்ரூவ்மெண்ட் கமிட்டியில் இருக்கிறேன்.
ஆனால் இது கௌரவ பதவிதான். எனக்கு குடும்பம் இருக்கிறது, 30,000 பென்ஷன் மட்டும் போதாது. எனவே நான் மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் உதவி கேட்டேன். சச்சின் டெண்டுல்கருக்கு என் நிலைமை தெரியும். ஆனால் நான் அவரிடமிருந்து எதுவும் எதிர்பார்க்கவில்லை. அவர் எனக்கு மிடில்செக்ஸ் குளோபல் அகாடமியைக் கொடுத்தார். நான் மகிழ்ச்சியடைந்தேன், சச்சின் எனக்கு சிறந்த நண்பர். எப்போதும் எனக்கு அவர் இருக்கிறார்.
மேலும் படிக்க | CSK அணியில் இருந்து ஜடேஜா விலகல்! ரெய்னாவை சேர்க்க திட்டம்!
அப்போதெல்லாம் ஷர்தாஸ்ரம பள்ளிக்கு எங்கள் அணி செல்லும்போது நான் அங்குதான் உணவு உண்பேன். அங்குதான் சச்சின் என் நண்பனாக எழுந்து நின்றார். நான் மிகவும் ஏழை குடும்பத்தில் பிறந்தவன்” என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ