SA vs AUS: 2வது அரையிறுதியில் மழை வந்தால் பைனலுக்கு தகுதி பெறுவது யார் தெரியுமா?

Australia vs South Africa: தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று 2வது அரையிறுதியில் கொல்கத்தாவில் விளையாட உள்ளன.   

Written by - RK Spark | Last Updated : Nov 16, 2023, 10:55 AM IST
  • அரையிறுதியில் மோதும் ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா.
  • ஈடன் கார்டன் மைதானத்தில் போட்டி நடைபெற உள்ளது.
  • பைனலுக்கு முன்னேற இரு அணிகளும் தீவிர பயிற்சி.
SA vs AUS: 2வது அரையிறுதியில் மழை வந்தால் பைனலுக்கு தகுதி பெறுவது யார் தெரியுமா? title=

ICC ODI World Cup Semi-Final: தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.  மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த போட்டியில் இரு அணிகளும் பலமாக உள்ளதால் யார் பைனலுக்கு செல்ல போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில், இன்றைய போட்டியில் மழை குறிக்கிடுமா என்பதை பற்றி பார்ப்போம். ஒருநாள் உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியாவும் தென்னாப்பிரிக்காவும் நேருக்கு நேர் மோத உள்ளன.  முதல் அரை இறுதி போட்டியில் இந்தியா நியூஸிலாந்து அணியை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறி உள்ளது.  பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேலும் படிக்க | 50வது சதமடித்தவுடன் சச்சினுக்கு தலை வணங்கிய விராட் கோலி - அனுஷ்கா சர்மாவின் பிளையிங் கிஸ்.!

2வது அரையிறுதி போட்டியில் கிட்டத்தட்ட 60,000 க்கும் மேற்பட்ட கிரிக்கெட் ரசிகர்கள் மைதானத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த போட்டியில் மழை வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இருப்பினும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), நாக் அவுட் போட்டிகளுக்கு ரிசர்வ் நாளை வைத்துள்ளது. இன்று நடைபெறும் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான போட்டி மழையால் பாதிக்கப்பட்டால், நாளை ஆட்டம் மீண்டும் தொடங்கும். வெள்ளிக்கிழமையும் கொல்கத்தா முழுவதும் மழை பெய்ய 50 சதவீதம் வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால், புள்ளிப் பட்டியலில் ஆஸ்திரேலியாவை விட தென்னாப்பிரிக்கா முன்னணியில் இருந்ததால், தென்னாப்பிரிக்க அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

லீக் கட்டத்தில் தென்னாப்பிரிக்கா 9 ஆட்டங்களில் இரண்டு தோல்விகளை மட்டுமே சந்தித்தது. நெதர்லாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகளிடம் மட்டும் தோல்வியை சந்தித்து பலம் வாய்ந்த அணியாக இருந்தது. இதற்கிடையில், ஆஸ்திரேலியா தனது ஆட்டத்தை தோல்வியில் தொடங்கினாலும், அடுத்தடுத்து வெற்றிகளுடன் அரை இறுதிக்கு முன்னேறியது.  முதல் இரண்டு ஆட்டங்களில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியடைந்தது. மீதமுள்ள அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது ஆஸ்திரேலியா.

ஈடன் கார்டன் பிட்ச்

ஈடன் கார்டனில் உள்ள விக்கெட் பேட்டர்களுக்கு அதிகம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளுமே நட்சத்திர பேட்டிங் வரிசையை கொண்டுள்ளன.  இந்த மைதானத்தில் இதுவரை நான்கு உலகக் கோப்பை போட்டிகளை நடந்துள்ளது. இன்று நவம்பர் 16ம் தேதி கொல்கத்தாவில் வானிலை மேகமூட்டத்துடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நகரம் முழுவதும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  எனவே, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான உலகக் கோப்பை அரையிறுதி மோசமான வானிலை காரணமாக சில தடங்கல்களைக் சந்திக்கலாம். வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் முதல் 28 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம், அதே நேரத்தில் ஈரப்பதம் 71-90 சதவீதம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காற்றின் வேகம் மணிக்கு 10-15 கிமீ வேகத்தில் இருக்கும்.

உத்ததேச அணி:

ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்

தென்னாப்பிரிக்கா: குயின்டன் டி காக், டெம்பா பவுமா, ராஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசென், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, ஜெரால்ட் கோட்ஸி, லுங்கி என்கிடி

மேலும் படிக்க | சச்சினை வலிக்காமல் அடிக்கும் கோலி - அடுத்த சாதனையையும் தகர்த்தார்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News