இந்தியாவின் டி 20 உலகக் கோப்பையில் பங்கேற்க முடியாத லெக் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல், ஐபிஎல் இரண்டாம் கட்டத்தில் விளையாடுவதற்கு மிகவும் உற்சாகமாக உள்ளார். ஐபிஎல் போட்டியின் இரண்டாம் கட்டத்தில், முன்பு போலவே புத்திசாலிதனமாகவும் மற்றும் விக்கெட் எடுக்கும் பந்துவீச்சாளராகவும் இருப்பேன் என்று அவர் இன்று (வியாழக்கிழமை) கூறியுள்ளார்.
ஐபிஎல் போட்டிக்கான பயிற்சியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணி வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர். பயிற்சி முகாமில் கலந்துக்கொண்டு உள்ள சாஹல், ஐபிஎல் பயிற்சி முகாமில் பங்கேற்று இருப்பது நன்றாக இருக்கிறது. எனது பந்துவீச்சு சிறப்பாக உள்ளது. அது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
பழைய யுஜி திரும்பிவிட்டார்:
சிறப்பான வீரர்களின் பட்டியலில் ங்கள் பெயர் ஒரு நல்ல இடத்தில் வைத்திருக்கிறீர்கள் என்று நீங்கள் உணர்ந்தால், மன உறுதி உங்களுக்கு அதிகமாக இருக்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு நன்றாக பந்து வீசுவது மகிழ்ச்சி அளிக்கிறது. பழைய யுஜி திரும்பிவிட்டார் என்று மட்டுமே என்னால் சொல்ல முடியும் என்றார்.
முதல் சீசனில் சரியாக ஆடவில்லை:
கொரோனா தொற்றுநோய் காரணமாக மே மாதம் நடுப்பகுதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல், ஐக்கிய அரபு அமீரகத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் தொடங்குகிறது. இந்திய அணியில் மீண்டும் இடம் பெற முயற்சிக்கும் வீரர்களில் சாஹலும் ஒருவர். இவர் இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் முதல் சீசனில் அவரின் செயல்திறன் சரியாக இல்லை. ஏழு போட்டிகளில் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார்.
ALSO READ | IPL 2021: மீண்டும் ரசிகர்களுடன் களைகட்டவுள்ளது IPL, ஆனா ஒரு ட்விஸ்ட் இருக்கு
புள்ளிபட்டியலில் 3வது இடத்தில் RCB:
அமர்வின் மூலோபாயம் பற்றி தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசன் கூறினார், 'பயிற்சிக்கு வரும்போது, அனைவருக்கும் அவர்களின் பங்கு என்னவென்று தெரியும். நாங்கள் இதைப் பற்றி ஆலோசனை கூட்டங்களில் பேசியுள்ளோம். வீரர்களிடம் என்ன எதிர்பார்க்கிறோம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆர்சிபி தற்போது ஏழு போட்டிகளில் ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது.
ALSO READ | IPL 2021: உங்க வயசுக்கு என்னால இப்படி விளையாட முடியாது ப்ரோ! கோலியும், வில்லியர்சும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR