சர்வதேச கிரிக்கெட்டில் 400 சிக்ஸர்களை அடித்த முதல் இந்தியர்....

சர்வதேச கிரிக்கெட்டில் 400 சிக்ஸர்களை அடித்த முதல் இந்தியர் எனும் பெருமையினை பெற்றார் ரோஹித் சர்மா!

Last Updated : Dec 11, 2019, 07:50 PM IST
சர்வதேச கிரிக்கெட்டில் 400 சிக்ஸர்களை அடித்த முதல் இந்தியர்.... title=

சர்வதேச கிரிக்கெட்டில் 400 சிக்ஸர்களை அடித்த முதல் இந்தியர் எனும் பெருமையினை பெற்றார் ரோஹித் சர்மா!

சர்வதேச கிரிக்கெட்டில் பாரிய சாதனைகளை படைப்பது ரோஹித் சர்மாவுக்கு ஒன்றும் புதிதல்ல. இந்நிலையில் மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் புதியதொரு சாதனையை படைத்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில், இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர் சர்வதேச கிரிக்கெட்டில் 400 சிக்ஸர்களை அடித்த வீரர்களின் உயரடுக்கு பட்டியலில் இடம் பிடித்தார். குறித்த இப்போட்டியில் மூன்றாவது ஓவரில், ரோஹித் அடித்த சிக்ஸரின் மூலம் இந்த மைல்கல்லை எட்டினார்.

32 வயதான இந்திய நட்சத்திரம், சர்வதேச கிரிக்கெட்டில் 400 சிக்ஸர்களை பதிவு செய்த முதல் இந்தியர் என்ற பெருமையை இதன் மூலம் பெற்றார். இவருக்கு முன்னதாக பாகிஸ்தான் முன்னாள் பேட்ஸ்மேன் ஷாஹித் அப்ரிடி (476 சிக்ஸர்), மேற்கிந்திய தீவுகள் சர்வதேச வீரர் கிறிஸ் கெய்ல் (534 சிக்ஸர்) ஆகிய இருவரால் மட்டுமே இந்த மைல்கல்லை தாண்ட முடிந்தது. இந்நிலையில் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் 400 சிக்ஸர்களை அடித்து ரோஹித் இப்பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார். டி20 போட்டிகளை பெருத்தவரையில் ரோஹித் அதிக சிக்ஸ்ர் அடித்தவர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இரண்டாவது டி20 போட்டியிலேயே ரோஹித் சர்மாவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது, எனினும் அவர் தனது விக்கெட்டினை விரைவில் விட்டு சென்றதால் இந்த சாதனையினை அவரால் பதிவு செய்ய இயலாமல் போனது. அதுமட்டும் அல்லாமல் இந்திய அணியின் வெற்றியும் பறிக்கப்பட்டது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தய தீவுகள் அணி மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக இவ்விரு அணிகளுக்கு இடையேயான இரண்டு டி20 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இன்று மூன்றாவது டி20 மும்பையில் நடைப்பெற்று வருகிறது.  இத்தொடரில் இரு அணிகளுகம் 1-1 என்ற கணக்கில் சமநிலை பெற்றுள்ள நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News