இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. டெல்லியில் நடந்த முதல் டி20 போட்டியில் இந்தியாவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வீழ்த்தியது.
இதனையடுத்து இரண்டாவது டி20 கட்டாக்கில் நேற்று நடந்தது. வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்கியது. டாஸ் வென்ற எதிரணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இந்தியா 20 ஓவர்களுக்கு 148 ரன்களை மட்டுமே எடுத்தது. 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 18ஆவது ஓவரிலேயே இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.
இந்திய அணியின் பந்துவீச்சு எப்போதும் இல்லாத அளவுக்கு படு சொதப்பலாக இருந்ததே தோல்விக்கு காரணமாக கருதப்படுகிறது.
Innings Break!#TeamIndia post a total of 148/6 on the board.
Scorecard - https://t.co/pkuUUB966c #INDvSA @Paytm pic.twitter.com/fT893ErgVe
— BCCI (@BCCI) June 12, 2022
போட்டிக்கு பிறகு பேசிய கேப்டன் ரிஷப் பண்ட், “பந்து வீச்சாளர்கள் மிகவும் நன்றாக தங்களது ஆட்டத்தைத் தொடங்கினர். ஆனால் 10 ஓவர்களுக்குப் பிறகு, நன்றாகப் பந்து வீசவில்லை. அங்குதான் ஆட்டம் இந்தியாவின் கையை விட்டு போனதாக கருதுகிறேன்.
ஒரு அணியில் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். இனி வரும் போட்டிகளில் இது போன்ற விஷயங்களை சரி செய்வோம். அதேபோல், பேட்டிங் செய்யும்போது 10 முதல் 15 ரன்கள்வரை நாங்கள் குறைவாக அடித்துவிட்டோம் என்பதுதான் உண்மை” என்று கூறினார்.
மேலும் படிக்க | இந்த வீரர் இந்திய டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெற வேண்டும் - ரிக்கி பாண்டிங்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR