முதல் பிளே ஆப்! வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம்?

ஐபிஎல் 2021 போட்டியில் இன்று முதல் பிளே ஆப் சுற்று நடைபெறுகிறது. 

Written by - RK Spark | Last Updated : Oct 10, 2021, 03:53 PM IST
  • தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த ஆண்டு முதல்முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.
  • 11 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே தோல்வி பெற்றிருந்த சென்னை அணி கடைசி மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது
முதல் பிளே ஆப்! வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம்?  title=

ஐபிஎல் 2021 போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.  லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்து இன்று பிளே ஆப் சுற்று நடைபெற உள்ளது.  சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல் அணிகள் இன்று மோதவுள்ளன.  

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த ஆண்டு முதல்முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.  அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த வருடம் முதல் அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.  11 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே தோல்வி பெற்றிருந்த சென்னை அணி கடைசி மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.  லீக் சுற்று போட்டியில் டெல்லி அணியுடன் இரண்டு முறை மோதிய சென்னை இரண்டு முறையும் தோல்வியை தழுவியுள்ளது.  

ALSO READ ஹாட்ரிக் தோல்வி அடைந்த சிஎஸ்கே!

ஸ்ரேயஸ் அய்யர் காயம் காரணமாக இந்த சீசனின் தொடக்கத்தில் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கவில்லை.  இதன் காரணமாக தற்காலிகமாக கேப்டன் பொறுப்பு ரிஷப் பந்த்திற்கு கொடுக்கப்பட்டது.  அவரது தலைமையில் டெல்லி அணி ஆரம்பத்திலிருந்தே புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்து வந்தது.  இளம் வீரர்களைக் கொண்ட டெல்லி கேப்பிடல் கேபிட்டல்ஸ் மற்ற அணிகளுக்கு ஒரு வித பயத்தை ஏற்படுத்துகிறது.  

d

இன்று நடக்கவுள்ள முதல் பிளே ஆப்பில் மீண்டும் சென்னை அணியை எதிர்கொள்கிறது டெல்லி அணி.  கடந்த இருமுறையும் சென்னை அணியை வீழ்த்தி உள்ளதால் இம்முறையும் வீழ்த்தி பைனலுக்கு தகுதி பெற முயற்சிக்கிறது டெல்லி.  சென்னை அணியில் ஓபனிங் பார்ட்னர்ஷிப் சிறப்பாக அமைந்தாலும் பின்வரும் வீரர்கள் ரன்கள் அடிக்க தவறி வருவதால் மிடில் ஆர்டர் படுமோசமாக உள்ளது.  பௌலிங்கிலும் தாக்கூர் மட்டுமே சிறப்பாக பந்து வீசி வருகிறார்.  கடந்த இரண்டு போட்டிகளில் உத்தப்பாவிற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது, இந்த போட்டியில் அவருக்கு பதிலாக வேறு ஒருவர் மாற்றப்படுவார் என்று எதிர்பார்க்கபடுகிறது.  

காயம் காரணமாக கடந்த போட்டிகளில் விளையாடத சுரேஷ் ரெய்னாவை பற்றிய எந்த தகவலையும் அணி நிர்வாகம் கூறவில்லை.  பிளே ஆப்ல் டெல்லியை வீழ்த்தி பைனலுக்கு முன்னேற சென்னை அணி கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.  துபாய் மைதானத்தில் நடைபெற்ற 11 போட்டிகளில் 8 போட்டி இரண்டாவதாக பேட்டிங் பிடித்த அணிகள் வென்றுள்ளது.  அதனால் இன்றைய போட்டியில் டாஸ் வெல்வது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.  இன்று மாலை 7.30 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது. 

ALSO READ தமிழ் படங்களுடன் ஒத்துப்போகும் ஐபிஎல் அணிகள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News