ஹங்கேரியில் நடைப்பெற்று வரும் உலக மல்யுத்த போட்டியில் இந்தியாவின் மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா வெள்ள பதக்கம் வென்றுள்ளார்!
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் உலக மல்யுத்த போட்டி நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் பஜ்ரங் பூனியா மற்றம் ஜப்பானின் தக்குடோ ஓட்டாகுரோ மோதினர். ஆட்டத்தின் ஆரம்பம் முதலே பூனியாவின் இடது காலை குறிவைத்து தாக்கிய தக்குடோ ஓட்டாகுரோ 16-9 என்ற புள்ளி கணக்கில் போட்டியினை எளிதில் வென்றார்.
இந்த வெற்றியின் மூலம் இவர் 19-வயதில் உலக சேம்பியன் பெற்று ஜப்பான் நாட்டின் இளம் சாம்பியன் என்னும் பட்டம் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக 1974-ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டின் யுஜி தக்காடா தனது 20-வது வயதில் சாம்பியன் பட்டம் வென்று ஜப்பானின் இளம் சாம்பியன் என்னும் பட்டத்தினை பெற்றிருந்தார்.
உலக மல்யுத்த சாப்பியன் போட்டியின் 65 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் முன்னணி வீரர் பஜ்ரங் பூனியா முதலாவது சுற்றில் ஹங்கேரியைச் சேர்ந்த ரோமன் அஷாரினையும், 2-வது சுற்றில் தென்கொரியாவைச் சேர்ந்த லீ சியங்கையும், காலிறுதியில் மங்கோலியாவின் துல்கா துமர் ஒசிரையும் வீழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து அரையிறுதியில் கியூபாவின் அலெக்சாண்ட்ரோ என்ரிக் வால்டேசை எதிர்கொண்டார். பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் 4-3 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தகது!