மேலும் ஒரு மைல்கல் - ரன் மெஷின் விராட் கோலியின் புதிய சாதனை.!

மீண்டும் உங்கள் க்ளாசிக் கவர் ட்ரைவ் எப்போது கோலி ? - ரசிகர்கள் எதிர்பார்ப்பு   

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : May 20, 2022, 04:24 PM IST
  • மீண்டும் ஃபார்முக்கு திரும்பினாரா விராட் கோலி ?
  • குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடி ஆட்டம்
  • விமர்சனங்களில் இருந்து மீண்டெழும் கிங் கோலி!
மேலும் ஒரு மைல்கல் - ரன் மெஷின் விராட் கோலியின் புதிய சாதனை.! title=

2021ம் ஆண்டு டி20 உலக கோப்பை போட்டி அது. உச்சக்கட்ட எதிர்பார்ப்புடன் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின. இந்திய அணி முதலில் ஆட்டத்தை தொடங்கியது. ஷாயீன் அப்ரிடி என்ற இடது கை பாகிஸ்தான் பவுலர் இந்திய ஒபனர்களை திணறித்துக் கொண்டிருந்தார். ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் அடுத்தடுத்து வெளியேறினர். ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் ஷாகீன் அப்ரிடியைக் கண்டு அஞ்சியது. ஒரு பவுண்டரியாவது அவரது பந்தில் அடிக்க வேண்டும் என்று அங்கிருந்த அத்தனை பேரின் மனதிலும் ஓர் எண்ணம் வந்துபோயிருந்தது.  ஆனால், மிக அற்புதமாக ஷாகீன் அப்ரிடி வீசிய ஒரு பந்தை, அதைவிட அற்புதமாக சிக்ஸராக மாற்றி அசத்தினார் விராட் கோலி. ஒரு நல்ல ஷாட் என்பது ஒரு அற்புதமான பவுலிங்கில் அமைந்துள்ளது என்பார்கள். அந்தமாதிரியான ஒரு க்ளாசிக் சிக்ஸரை விராட் கோலி அலட்சியமாக அடித்து அசத்தினார். 

மேலும் படிக்க | விராட் கோலியின் டெஸ்ட் கேப்டன்சி சாதனைகள்!

கிரிக்கெட் புகழின் உச்சத்தில் இருக்கும் வீரர்களின் கிரிக்கெட் வாழ்வில் சரிவுக்காலம் வந்துபோவதுண்டு. விராட் கோலிக்கு வராமலா இருக்கும். நடப்பு ஐபிஎல் தொடருக்கு வருவதற்கு முன்பு ஒன்றரை ஆண்டுகளாக விராட் கோலியின் ஃபார்மில் தொய்வு ஏற்பட்டிருந்தது. இந்தியாவுக்கான போட்டியிலும் பெரிதாக விராட் விளையாடவில்லை. அதே சோர்வுடன்தான் நடப்பு ஐ.பி.எல் தொடரிலும் களம் கண்டார் கோலி. மீண்டும் ஃபார்முக்கு வரும் எந்த அறிகுறியும் நடப்புத் தொடரில் விராட் கோலியிடம் காணப்படவில்லை. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின்  போட்டி என்றாலே விராட் கோலியின் ஆட்டத்தில் அனல் பறக்கும். 

ஆனால், இந்த தொடரில் இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி,  வெறும் 236 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில் கொடுமை என்னவென்றால், மூன்று முறை கோல்டன் டக் அவுட் ஆகியிருந்தார். விமர்சகர்களுக்கு நல்ல கச்சாப்பொருளாக சிக்கினார் கோலி. அவரது ஆட்டத்தின் போக்கு முதல் கேப்டன்சி வரை சகலமும் விமர்சிக்கப்பட்டது. இந்த தொடரிலேயே கோலி ஒரு அரைசதம் அடித்தார். அதுவும் 53 பந்துகளில் 58 ரன்கள் எடுத்திருந்தார். அலட்சியமாக வந்து சதம் அடித்துச் செல்லும் விராட் கோலி எங்கே ? 53 பந்துகளில் 58 ரன்கள் எடுக்கும் விராட் கோலியை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளவில்லை. 

Virat

அதனால், இதை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. அதுமட்டுமல்லாமல், இந்த ரன்களில் ஒரு ஷாட் கூட அவரது க்ளாசிக் கவர் ட்ரைவ் ஆடவேயில்லை. தடும்மாற்றத்துடன் எடுக்கப்பட்ட ரன்கள்தான் இவை. கொஞ்சக் காலம் விராட் கோலி ஓய்வெடுக்க வேண்டும் என்று பகிரங்க விமர்சனங்கள் அவர் மீது எழுந்தன. ஆனால் விராட் கோலி, தெளிவாக ஒரு பதில் சொன்னார். ‘ 'நான் இப்போதும் துல்லியமான கவர் ட்ரைவ் ஆடுகிறேன். என்னால் கவர் ட்ரைவ் ஆட முடியாமல் போனால், நிச்சயம் கிரிக்கெட்டை விட்டு ஒதுங்கிவிடுவேன்’ என்று கூறினார். நேற்று நடந்த குஜராத்துடனான போட்டியில் ஆர்.சி.பி வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. ஒருவேளை ஆடும் பொசிஷனை மாற்றினால் மீண்டும் விராட் கோலி ஃபார்முக்கு வருவாரா என்ற எதிர்பார்ப்புடன் ஆர்.சி.பியில் மூன்றாம் இடத்தில் இருந்து ஓபனிங் தரப்பட்டது. 

மேலும் படிக்க | மூன்று முறை டக் அவுட்... பேட்டியில் கண் கலங்கிய விராட் கோலி

நேற்று நடந்த போட்டியில் ஒபனராக கோலி வந்தார். முழு வின்டேஜ் விராட் கோலி இல்லையென்றாலும், நேற்று அற்புதமான சில கவர் ட்ரைவ் ஷாட்களை அடித்து அசத்தினார். 54 பந்துகளில் 73 ரன்கள் எடுத்தார். நெடுநாட்களுக்குப் பிறகு இந்த இன்னிங்கசில் 8 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் கோலி. இந்தப் போட்டிக்காக முந்தைய நாள் கிட்டத்தட்ட 90 நிமிடம் வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். நேற்று அடித்த 73 ரன்கள் மூலம் புதிய மைல்கல்லை ஒன்றை எட்டியுள்ளார் கோலி. அதாவது, ஐபிஎல் வரலாற்றில் ஒரே அணிக்காக (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) விளையாடி 7000 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். 

அதேபோல், சேஸிங்கில் 3 ஆயிரம் ரன்களை கடந்த முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையும் மலைபோல் குவிந்துள்ள அவரது சாதனைப் பட்டியலில் கீழே சேர்ந்துவிட்டன. மீண்டும் விராட் கோலியின் ருத்ரதாண்டவத்தைப் பார்க்க ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் வேளையில், நேற்றைய அவரது ஆட்டம் ஒரு ‘ட்ரைலரைப்’ போல அமைந்தது. ஏனெனில், கண்ணில் ஒத்திக்கொள்ளும் அவரது கவர் ட்ரைவ்-ஐ பவுலரும் ரசித்து வியப்பதுண்டு.! COME BACK KING KOHLI.....!!!!

மேலும் படிக்க | நா திரும்பி வந்துட்டேன்னு சொல்லு! கோலியின் அதிரடியில் ஆர்சிபி வெற்றி!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News