INDvsNZ முதல் டி20: நியூசிலாந்து அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

இந்திய அணி வெற்றி பெற 220 ரன்கள் தேவை.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 6, 2019, 04:08 PM IST
INDvsNZ முதல் டி20: நியூசிலாந்து அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி title=

15:49 06-02-2019
இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, நியூசிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. களம் இறங்கிய நியூசிலாந்து ஆரம்ப முதலே அதிரடியாக விளையாடிது. 

20 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக டிம் சீஃபெர்ட் 84(43) ரன்கள் எடுத்தார். 

வெற்றி பெற 220 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆடத் தொடங்கிய இந்திய அணி ஆரம்ப முதலே விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. இந்திய வீரர்கள் ஒருவர் கூட நிலைத்து நின்று ஆடவில்லை. இந்திய அணியில் அதிகபட்சமாக முன்னால் கேப்டன் எம்.எஸ். தோனி 39(31) ரன்கள் எடுத்தார்.

இந்திய அணி 19.1 ஓவருக்கு 139 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. நியூசிலாந்து அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்நிலையில் உள்ளது.


15:12 06-02-2019
10.6 ஓவரில் 77 ரன்னுக்கு ஆறாவது விக்கெட்டை இழந்த இந்திய அணி; ஹார்திக் பாண்டியா 4(4) ரன்கள் எடுத்து அவுட்


15:08 06-02-2019
10.2 ஓவரில் 72 ரன்னுக்கு ஐந்தாவது விக்கெட்டை இழந்த இந்திய அணி; தினேஷ் கார்த்திக் 5(5) ரன்கள் எடுத்து அவுட்


15:02 06-02-2019
8.4 ஓவரில் நான்காவது விக்கெட்டை இழந்த இந்திய அணி விஜய் ஷங்கர் 27(18) ரன்கள் எடுத்து அவுட் ஆனார்

 


14:57 06-02-2019
இந்திய அணி வெற்றி பெற 220 ரன்கள் தேவை. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ரோகித் சர்மா மாறும் சிகர் தவான் அவுட் ஆனார்கள். பின்னர் வந்த ரிஷப் பந்த் நான்கு ரன்கள் எடுத்து அவுட் ஆனர். தற்போது விஜய் சங்கர் மற்றும் எம்.எஸ் தோனி விளையாடி வருகின்றனர்.

இந்திய அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்துள்ளது.

 


14:08 06-02-2019
இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதல் டி20 போட்டியில் 20 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக டிம் சீஃபெர்ட் 84(43) ரன்கள் எடுத்தார். ஆரம்ப முதலே அதிரடியாக விளையாடிய நியூசிலாந்து அணி நல்ல ரன்களை இலக்காக இந்திய அணிக்கு கொடுத்துள்ளது. இந்திய அணி வெற்றி பெற 220 ரன்கள் தேவை.

இன்னும் சற்று நேரத்தில் இந்திய அணி ஆட உள்ளது.

 

 


13:59 06-02-2019
ஆறாவது விக்கெட்டை இழந்த நியூசிலாந்து அணி. ராஸ் டெய்லர் 23(14) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இந்த விக்கெட்டை புவனேஷ்வர் குமார் கைப்பற்றினார்.


13:54 06-02-2019
ஐந்தாவது விக்கெட்டை இழந்த நியூசிலாந்து அணி. கொலின் டி கிராண்ட்ஹாம் 3(4) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இந்த விக்கெட்டை ஹார்திக் பாண்டியா 


13:50 06-02-2019
நான்காவது விக்கெட்டை இழந்த நியூசிலாந்து அணி. கேன் வில்லியம்சன் 34(22) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இந்த விக்கெட்டை யூசுவெந்திர சஹால் கைப்பற்றினார்.

13:38 06-02-2019
மூன்றாவது விக்கெட்டை இழந்த நியூசிலாந்து அணி. டாரல் மிட்செல் 8(5)ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இந்த விக்கெட்டை ஹார்திக் பாண்டியா கைப்பற்றினார்.


13:25 06-02-2019
இரண்டாவது விக்கெட்டை இழந்த நியூசிலாந்து அணி. அதிரடியாக ஆடி வந்த டிம் சீஃபெர்ட் 84(43)ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இந்த விக்கெட்டை கலீல் அகமது கைப்பற்றினார்.


13:08 06-02-2019
முதல் விக்கெட்டை இழந்த நியூசிலாந்து அணி. கொலின் மன்ரோ 34(20) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இந்த விக்கெட்டை குர்ணால் பாண்டியா கைப்பற்றினார்.

 


டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு செய்ததை அடுத்து நியூசிலாந்து அணி தனது முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

 

 


நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 ஒருநாள் மற்றும், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் முடிந்தது, இன்று முதல் டி20 தொடர் தொடங்கியது.

5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வென்ற இந்திய அணி, இன்று முதல் டி20 போட்டியில் பங்கேற்று வருகிறது. 

இந்தியா: ரோஹித் சர்மா, ஷிகர் தவான், சுப்மன் கில், ரிஷப் பண்ட், தோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், சாஹல், குல்தீப் யாதவ், கலீல் அஹமது.

நியூசிலாந்து: காலின் முன்ரோ, ஹென்ரி நிக்கோல்ஸ், கேன் வில்லியம்சன், டிம் செய்ஃபெர்ட், ராஸ் டெய்லர், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சாட்னர், இஷ் சோதி, டிம் சவுத்தி, லூகி பெர்குஷான்

Trending News