மும்பை இந்தியன்ஸ் டீமுக்குள் உட்சக்கட்ட உட்கட்சி பூசல்! இன்று முதல் வெற்றி பெறுமா?

Mumbai Indians vs Rajasthan Royals, IPL 2024 Match Prediction: மும்பை இந்தியன்ஸ் அணி முதல் இரு ஐபிஎல் போட்டிகளிலும் இந்த தொடரில் தோல்வியை சந்தித்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 1, 2024, 07:22 PM IST
  • மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் உட்கட்சி பூசல்
  • முதல் இரண்டு போட்டிகளிலும் எம்ஐ தோல்வி
  • ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெல்லுமா?
மும்பை இந்தியன்ஸ் டீமுக்குள் உட்சக்கட்ட உட்கட்சி பூசல்! இன்று முதல் வெற்றி பெறுமா? title=

ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி வழக்கம்போல ஐபிஎல் தொடரை தோல்வியுடனேயே தொடங்கியிருக்கிறது. அந்த அணி 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் ஆடும் முதல் போட்டியில் வெற்றி பெற்றதே கிடையாது. கிட்டதட்ட 11 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் தொடரை தோல்வியுடன் தொடங்கியதைப் போலவே இந்த ஆண்டும் தொடங்கியிருக்கிறது. இருப்பினும் வழக்கத்துக்கு மாறாக அந்த அணியில் இந்த ஆண்டு கோஷ்டி பூசல் இருப்பதால் வெற்றிப்பாதைக்கு திரும்புமா என்பது ரசிகர்கள் மத்தியில் இருக்கும் மிகப்பெரிய கேள்வி.

மும்பை இந்தியன்ஸ் அணியில் கோஷ்டி பூசல்

மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஆண்டு புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையில் விளையாடிக் கொண்டிருக்கிறது. அந்த அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா எந்தவித காரணமும் இல்லாமல் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. ரோகித் சர்மாவும் இந்த விஷயத்தில் அப்செட்டாக தான் இருக்கிறார்.  மும்பை இந்தியன்ஸ் அணி வலுக்கட்டாயமாக அவரிடம் இருந்து கேப்டன்சியை பறித்ததை ரோகித் விரும்பவில்லை. இதனால் அடுத்த ஆண்டு வேறொரு ஐபிஎல் அணிக்கு செல்லவும் திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஆதரவாக ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார், திலக் வர்மா ஆகியோர் இருக்கின்றனர். இதனால் அணிக்குள்ளேயே ரோகித் vs ஹர்திக் பாண்டியா என்ற கோஷ்டி உருவாகியுள்ளது.

மேலும் படிக்க | CSK vs DC : தோனியை மீம் மெட்டீரியலாக்கிய நெட்டிசன்ஸ்! சென்னை தோற்றும் ஜெயித்ததாக புகழாரம்..

முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வி

இதன்காரணமாக முதல் இரண்டு ஐபிஎல் போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. முதல் போட்டியில் வெற்றி பெறுவதற்கான சூப்பர் வாய்ப்பு இருந்தபோதும் பேட்ஸ்மேன்களில் சொதப்பலால் தோல்வியை தழுவியது அந்த அணி. 2வது போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான 260 ரன்களுக்கும் மேல் விட்டுக் கொடுத்து அதனை சேஸ் செய்து இறுதியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. டாப் கிளாஸ் பந்துவீச்சாளர்கள் இருந்தபோதும், 20 கிரிக்கெட்டில் மோசமான ஸ்கோரை கொடுத்த அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி மாறியது. 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதல்

இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்கொள்ள இருக்கிறது. மூன்றாவது போட்டியில் ஆடும் அந்த அணி இந்த போட்டியிலாவது வெற்றி பெற்று புள்ளிக் கணக்கை தொடங்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ராஜஸ்தான் அணி வலுவான அணியாக உள்ளது. அந்த அணி முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. அந்த அணியை வீழ்த்த வேண்டும் என்றால் மும்பை இந்தியன்ஸ் அணி உட்கட்சி பூசலை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, தரமான கிரிக்கெட்டை விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

ஹர்திக் பாண்டியா அணுகுமுறை

அதற்கு பொறுப்பு ஹர்திக் பாண்டியாவிடம் தான் இருக்கிறது. அவர் ரோகித் உள்ளிட்ட அனைத்து பிளேயர்களையும் அரவணைத்து செல்ல வேண்டும். ஆனால் அவர் அப்படி நடந்து கொள்வதே இல்லை என்பது பெரிய குற்றச்சாட்டாக இருக்கிறது. ரோகித் உள்ளிட்ட அனைத்து சீனியர் பிளேயர்களையும் மரியாதை குறைவாக நடத்துவதுடன் தான்தோன்றித்தனமாக முடிவுகளை எடுப்பது மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் பெரும் சலசலப்பை உருவாக்கியிருக்கிறது. இதனை ஹர்திக் சரி செய்து கொண்டால் மும்பை அணி வெற்றி பாதைக்கு திரும்பும், இல்லையென்றால் இன்றைய ஐபிஎல் லீக் போட்டியிலும் தோல்வியடையும்.

மேலும் படிக்க | MI vs RR: மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பதவியில் இருந்து விலகிய ஹர்திக் பாண்டியா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News