டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக பெரும் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் மிட்சல் மார்ஷ். ஆஸ்திரேலிய வீரரான இவரை டெல்லி அணி 6.50 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியது. ஆனால், அவர் இந்த ஐபிஎல் போட்டியில் காயம் காரணமாக இதுவரை களமிறங்கவில்லை. அவர் இன்னும் காயத்தில் இருந்து குணமாகததால் இன்னும் சில போட்டிகளிலும் விளையாடமாட்டார் என்ற தகவல் இப்போது வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க |ஒரே சிக்ஸரில் உலக சாதனை படைத்த பாண்ட்யா! அந்த சிக்ஸரில் அப்படி என்னதான் ஸ்பெஷல்?!
மிட்செல் மார்ஷின் காயம்
ஆஸ்திரேலிய அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்துக்கான அணியில் இடம்பிடித்திருந்த மிட்செல் மார்ஷ் எதிர்பாரதவிதமாக காயமடைந்தார். சிகிச்சை பெற்று வரும் அவர், காயத்தில் இருந்து குணமடைந்து வருகிறார். முதலில் அவருடைய காயம் குறித்த அப்டேட்டைக் கொடுத்த டெல்லி அணி, கொல்க்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்குவார் என தெரிவித்திருந்தது. ஆனால், அப்போட்டியில் அவர் களமிறங்கவில்லை.
எப்போது களமிறங்குவார்?
லேட்டஸ்டாக வெளியாகியிருக்கும் தகவலின்படி, அவருடைய காயம் முன்பிருந்ததைவிட இன்னும் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மூன்று முதல் நான்கு போட்டிகளுக்கு மிட்செல் மார்ஷ் களமிறங்க வாய்ப்புகள் இல்லை என டெல்லி அணி வட்டாரம் தெரிவித்துள்ளது. தற்போது டெல்லி அணி புள்ளிப் பட்டியலில் 2 வெற்றி 2 தோல்விகளுடன் 6வது இடத்தில் உள்ளது.
மிட்செல் மார்ஷ் முக்கியம் ஏன்?
மிட்செல் மார்ஷ் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர். கடந்த ஆண்டு டெல்லி அணிக்காக விளையாடிய ஸ்டொயினிஸூக்கு பதிலாக டெல்லி அணிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். 6.50 கோடி ரூபாய்க்கு அவர் ஏலம் எடுக்கப்பட்டபோதும், தற்போது வரை அந்த அணிக்காக அவர் களமிறங்காதது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | ரோகித் சர்மாவுக்காக காத்திருக்கும் உலக சாதனை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR