Video: துப்பாக்கி சுடுதலில் ஈடுப்படும் MS டோனி!

CSK அணித்தலைவர் டோனி, துப்பாக்கி சுடுதலில் ஈடுப்படும் வீடயோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது!

Written by - Mukesh M | Last Updated : Apr 25, 2018, 11:27 AM IST
Video: துப்பாக்கி சுடுதலில் ஈடுப்படும் MS டோனி! title=

CSK அணித்தலைவர் டோனி, துப்பாக்கி சுடுதலில் ஈடுப்படும் வீடயோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது!

IPL 2018 தொடரின் போட்டிகள் தற்போது விருவிருப்பாக நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் போட்டிகள் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைப்பெற்று வருகிறது.

ஒவ்வொரு போட்டி முடிந்தப் பின்னரும், அடுத்தப் போட்டிகளில் பங்கேற்க அணிவீரர்கள் தங்கள் குடும்பங்களுடன் படையெடுத்து வருகின்றனர். இந்தப் படையெடுப்பிற்கு இடையில் தங்களது ஓய்வு நேரங்களை பயனுள்ளதாகவும் வீரர்கள் சிலர் மாற்றி வருகின்றனர்.

அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி, துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளார். இந்திய ராணுவத்தில் Lieutenant Colonel-ஆக இருக்கும் இவர் துப்பாக்கி சுடுதலில் ஈடுபடுத்தல் அவசியம் தானே!

இந்த பயிற்சியின் வீடியோவினை தனது ட்விட்டர் பக்கதினில் அவர் பதிவிட்டுள்ளார். இந்த பயிற்சி குறித்து அவர் தெரிவிக்கையில், விளம்பரப்பட சூட்டிங்கில் நடிப்பதை காட்டிலும் இந்த சூட்டிங் (துப்பாக்கி சுடுதல்) எளிமை தான் என தெரிவித்துள்ளார்!

Trending News