இங்கிலாந்து சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவில் இரண்டு போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி இன்று துவங்கியது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோய் ரூட் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். முதலில் விளையாடிய இங்கிலாந்து அணிமுதல் இன்னிங்சில் 246 ரன்கள் எடுத்தது.
அதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை துவங்கிய இந்திய துவக்க வீரர்கள் கே எல் ராகுல் மற்றும் தவான் இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் நாள் முடிவில் இந்தியா 19/0 என இருந்தது. தவான் 3 ரன்களுடனும், ராகுல் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடர்ந்து நடைபெற்றது.
நேற்றைய விட 8 ரன்கள் மட்டுமே அதிகமாக எடுத்த நிலையில், தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் 19(24) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இவர் இங்கிலாந்துக்கு எதிராக கடந்த மூன்று டெஸ்ட் போட்டிகளில் குறிப்பிடத்தக்க முறையில் விளையாடவே இல்லை. அதுவும் தொடக்க வீரர்ராககளம் இறங்கும் லோகேஷ் ராகுல் நன்றாக ஆடி இந்திய அணி நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுக்க வேண்டும். ஆனால் இவரின் ஆட்டம் எந்தவித பயனும் அளிக்கவில்லை.
இவே கடந்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் முதல் டெஸ்ட் போட்டியில் 4,13 ரன்களும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 8,10 ரன்களும், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 23,36 ரன்களும், தற்போது நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னின்சில் 19 ரன்களும் எடுத்து அவுட் ஆனார். மூன்று டெஸ்ட் மற்றும் ஒரு இன்னிங்ஸில், இவர் எடுத்த மொத்த ரன்கள் 113 மட்டுமே.
அடுத்த வருடம் இங்கிலாந்தில் உலக கோப்பை நடைபெற உள்ள நிலையில், தொடக்க வீர்ரரான லோகேஷ் ராகுலின் ஆட்டம் கவலையை ஏற்படுத்தி உள்ளது. அவர் மீண்டும் நல்ல பார்முக்கு திரும்ப வேண்டும் என கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
27 டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ள லோகேஷ் ராகுல் நான்கு சதம், 11 அரைசதம் என மொத்தம் 1606 ரன்கள் எடுத்துள்ளார். இவர் டெஸ்ட் போட்டியை பொருத்த வரை அதிகபட்சமாக 199 ரன்கள் எடுத்துள்ளார். இந்த 199 ரன்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக தான் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.