லோகேஷ் ராகுலுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது -ரவி சாஸ்திரி

Last Updated : Sep 1, 2016, 08:05 PM IST
லோகேஷ் ராகுலுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது -ரவி சாஸ்திரி  title=

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி. இவர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகவும், இயக்குனராகவும் செயல்பட்டார். லோகேஷ் ராகுலை குறித்து அவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது என்று கூறியுள்ளார்.

இதைக்குறித்து ரவி சாஸ்திரி கூறுகையில்:- கடந்த ஓராண்டில் இந்திய அணியில் தன்னை மேம்படுத்திக் கொண்டதில் லோகேஷ் ராகுல்தான் முன்னணியில் உள்ளார். அவர் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் மட்டுமல்ல, ஒருநாள் மற்றும் டி20 போட்டியிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். அவருக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. இந்தியாவின் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் சிறந்து விளங்குவார் என்றார்.

லோகேஷ் ராகுல் வெஸ்ட் இண்டீஸ் அணி எதிரான டெஸ்ட் தொடரில் 158 ரன்கள் விளாசியதுடன், அமரிக்காவின் பிளோரிடாவில் நடைபெற்ற டி20 தொடரிலும் சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News