இன்றைய ஐபிஎல் 41வது போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய டெல்லி கேபிடல்ஸ் அணியை அழைத்தது. களம் இறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரர்கள் ஷிகர் தவான் (24) மற்றும் ஸ்டீவ் ஸ்மித் (39) ஆகியோரின் கூட்டணி மூலம் விரைவாக 35 ரன்களை எட்டியது. இந்த கூட்டணியை பெர்குசன் முறியடித்தார். இங்கிருந்து கே.கே.ஆர் பந்துவீச்சாளர்கள் கை ஓங்கியது. ஸ்ரேயாஸ் ஐயருக்கு 1 ரன்னில் நரேன் அவுட் செய்து டெல்லிக்கு இரண்டாவது அடியை கொடுத்தார்.
அதனைத்தொடர்ந்து விளையாடிய ஷிம்ரான் ஹெட்மியர் (4), லலித் யாதவ் (0) மற்றும் அக்சர் பட்டேல் (0) என்ற சொற்ப ரன்களில் வெளியேறினர். 9 ரன்கள் எடுத்திருந்த ரவிச்சந்திரன் அஷ்வின் கடைசி ஓவரில் ராணாவிடம் அவுட் ஆனார். டெல்லி அணியின் ரிஷப் பந்த் (39) மற்றும் அவேஷ் கான் (5) வீரர்கள் அவுட் ஆனார்கள். லோகி பெர்குசன், சுனில் நரைன் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். டிம் சவுத்தி ஒரு விக்கெட் எடுத்தார்.
இறுதியாக டெல்லி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்தது. 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களம் இறங்கிய கொல்கத்தா அணி 28 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தாலும், இறுதியாக 18.2 ஓவரில் 130 ரன்கள் அடித்து மூன்று விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.
இந்த வெற்றி மூலம் 10 புள்ளிகளைப் பெற்று பட்டியலில் கொல்கத்தா அணி நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேவேளையில் டெல்லி அணி 16 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
#KKRvDC #KKR #AmiKKR #KorboLorboJeetbo #আমিKKR #IPL2021 pic.twitter.com/tcsVU4H4ry
— KolkataKnightRiders (@KKRiders) September 28, 2021
ஆட்டமிழக்காமல் கடைசி வரை மைதானத்தில் இருந்த நிதிஷ் ராணா, சுப்மான் கில் மற்றும் சுனில் நரைன் ஆகியோரின் முக்கிய பங்களிப்புடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது. டெல்லி கேபிடல்ஸ் அணியை சேர்ந்த அவேஷ் கான் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினாலும், டெல்லி வீரர்கள் அதிக ரன்கள் எடுக்காததால், அவரது முயற்சி வீணானது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR