நான்கு ஆண்டுகளுக்கு பின் மும்பையை வீழ்த்தியது கொல்கத்தா!!

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி அபார வெற்றி!!

Last Updated : Apr 29, 2019, 08:22 AM IST
நான்கு ஆண்டுகளுக்கு பின் மும்பையை வீழ்த்தியது கொல்கத்தா!! title=

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி அபார வெற்றி!!

கொல்கத்தா அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில், மும்பை அணியை சேர்ந்த ஹர்திக் படேல் அதிரடியாக விளையாடி,34 பந்துகளில்  91 ரன்கள் எடுத்தும், அந்த அணியால் வெற்றி பெற முடியவில்லை. இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 232 ரன்கள் எடுத்தது. 233 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற கடின இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் திறம் பட விளையாடினர். 

அந்த அணியின் ஹர்திக் பாண்டியா, 34 பந்துகளில் 91 ரன்கள் எடுத்து சிக்சர் மழை பொழிந்தார். எனினும், எவ்வளவோ முயன்றும் இமாலய இலக்கை எட்ட முடியாத மும்பை அணி, கொல்கத்தாவிடம் வீழ்ந்தது. மும்பை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு, 198 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், கொல்கத்தா அணி, 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

Trending News