Jasprit Bumrah-வுக்கு திருமண வாழ்த்து தெரிவித்த மயங்க் அகர்வால் செய்த தவறு என்ன தெரியுமா?

நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விலகியதிலிருந்து, அவரது திருமணம் குறித்த செய்திகள் வெளிவரத் தொடங்கின. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 16, 2021, 12:45 PM IST
  • இந்திய கிரிக்கெட் அணியின் ஜஸ்பிரித் பும்ராவின் திருமணம் நேற்று கோலாகலமாக நடந்தது.
    சில நாட்களாக அவரது திருமணம் குறித்த செய்திகள் வெளிவரத் தொடங்கின.
    மயங்க் அகர்வால் புதுமண ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
Jasprit Bumrah-வுக்கு திருமண வாழ்த்து தெரிவித்த மயங்க் அகர்வால் செய்த தவறு என்ன தெரியுமா?  title=

இந்திய கிரிக்கெட் அணியின் ஜஸ்பிரித் பும்ராவின் திருமணம் நேற்று கோலாகலமாக நடந்தது. கோவாவில் நடைபெற்ற திருமண கொண்டாட்டங்களுக்குப் பிறகு, இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் புதுமண ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்தார். ஆனால், இதில் மயங்க் அகர்வால் ஒரு தவறு செய்துவிட்டார். ட்விட்டரில் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த மயங்க், பும்ராவின் மனைவி சஞ்சனா கணேசனுக்குப் பதிலாக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பங்காரை டேக் செய்து விட்டார்.

எனினும் விரைவிலேயே தான் செய்த தவறை உணர்ந்த மயங்க், தன் முதல் ட்வீட்டை நீக்கிவிட்டு, புதிதாக மற்றொரு ட்வீட்டை போஸ்ட் செய்தார். எனினும், அவரை விட விரைவாக ரசிகர்கள் இந்த தவறை கண்டுகொண்டனர். அதற்கான பின்னூட்டங்களையும் உடனடியாக அனுப்பத் தொடங்கினர். அவற்றில் சில இதோ உங்கள் பார்வைக்கு...

ஜஸ்பிரீத் பும்ராவின் (Jasprit Bumrah) திருமணத்திற்கு போட்ட ட்வீட்டில் மயங்க் அகர்வால் செய்த தவறை அவர் மறக்க நினைத்தாலும், இணையவாசிகள் மறக்க விட மாட்டார்கள் போலும். 

ALSO READ: ICC Rating: Narendra Modi Stadium ஆடுகளம் சராசரியா? மிகவும் ஏற்றதா?

வரவிருக்கும் IPL 2021-ல், மயங்க் அகர்வால், பஞ்சாப் கிங்க்ஸ் அணியில் விளையாடுவார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த IPL-ல் அவர் அதிக ரன்களை எடுத்த வீரர்களில் ஒருவராக இருந்தார். அவருக்கும் KXIP கேப்டன் கே.எல்.ராகுலுக்கும் இடையில் 2020 சீசனில் , பெரும்பாலும் ஆரஞ்சு தொப்பிக்கான போட்டி இருந்தது. 

மறுபுறம், பும்ராவும் சஞ்சனாவும் தங்களது திருமணத்திற்கு 20 விருந்தினர்களை மட்டுமே அழைத்திருந்ததாகவும், திருமணம் நடந்த இடத்தில், மொபைல் போன்கள் தடைசெய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொற்றுநோய் காலத்தில் தங்களது திருமணம் பற்றிய செய்தியை கடைசி வரை மறைத்து வைப்பதில் இந்த ஜோடி வெற்றி பெற்றது என்றே கூற வேண்டும். 

நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விலகியதிலிருந்து, அவரது திருமணம் குறித்த செய்திகள் வெளிவரத் தொடங்கின. 

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் பும்ரா ஆடமாட்டார் என்றே கூறப்படுகிறது. இதற்குப் பிறகு இந்தியன் பிரீமியர் லீக் நடைபெறும். நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணியில் பும்ரா முக்கிய பங்கு வகிக்கிறார். IPL-ன் அடுத்த பதிப்பு ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்கவுள்ளது. முதல் போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடக்கவுள்ளது. 

ALSO READ: Watch: வழுக்கை தலை அவதாரத்தில் MS Dhoni; வைரல் ஆகும் ஐபிஎல் 2021 விளம்பரம்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News