மீண்டும் 'RCB'க்குத் திரும்பும் மிஸ்டர்-360? - ரகசியத்தை உடைத்தார் விராட் கோலி!

முன்னாள் வீரர் டி வில்லியர்ஸ் ஆர்சிபிக்கு மீண்டும் திரும்ப வாய்ப்புள்ளதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 11, 2022, 06:22 PM IST
  • நடப்பு ஐ.பி.எல்லில் விராட் கோலி சுமாராகவே விளையாடிவருகிறார்.
  • நடப்புத் தொடரில் 3 முறை டக் அவுட் ஆகியுள்ளார் விராட் கோலி.
  • டி வில்லியர்ஸ் ஆர்சிபிக்கு திரும்ப வாய்ப்புள்ளதாக விராட் கோலி தகவல்.
மீண்டும் 'RCB'க்குத் திரும்பும் மிஸ்டர்-360? - ரகசியத்தை உடைத்தார் விராட் கோலி! title=

நடப்பு ஐபிஎல் சீசனில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இதுவரை சுமாராகவே விளையாடி இருக்கிறார்.

12 போட்டிகளில் விளையாடி வெறும் 216 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள அவர் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார். உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களுள் ஒருவரான அவர் நடப்புத் தொடரில் மட்டும் 3 முறை டக் அவுட் ஆகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.

அதேநேரம் அவர் சார்ந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, புள்ளிப் பட்டியலில் இம்முறை கொஞ்சம் நல்ல நிலையிலேயே உள்ளது. 12 போட்டிகளில் விளையாடி 7 வெற்றிகளுடன் அவ்வணி நான்காம் இடத்தில் இருந்துவருகிறது.

                                                          

மேலும் படிக்க | "ஐ டோன்ட் லைக் 'DUCK’, பட் 'DUCK' லைக்ஸ் மீ"- வைரலாகும் விராட் கோலி மீம்ஸ்!

இந்நிலையில் ஆர்சிபி அணியின் முன்னாள் வீரர் டி வில்லியர்ஸ் பற்றி சில தகவல்களை மனம் திறந்துள்ளார் விராட் கோலி. டிவில்லியர்ஸை மிகவும் மிஸ் செய்வதாகத் தெரிவித்துள்ள அவர், டிவில்லியர்ஸுக்கு அடிக்கடி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிவருவதாகவும் தெரிவித்தார். 

ஆர்சிபி அணியின் செயல்பாடுகளை டிவில்லியர்ஸ் தொடர்ந்து கவனித்துவருவதாகக் கூறியுள்ள விராட் கோலி, அடுத்த ஆண்டு ஆர்சிபி அணிக்கு டிவில்லியர்ஸ் திரும்ப வாய்ப்புள்ளதாகவும் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

                                                   

டிவில்லியர்ஸ் மீண்டும் அணிக்குத் திரும்பவுள்ளதாக பல மாதங்களாகவே சொல்லப்பட்டுதான் வருகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ மட்டத்திலிருந்து அப்படி ஏதும் தகவல் வெளியாகவில்லை. ஆனால் அவரைப் போனில் அடிக்கடி தொடர்புகொண்டு பேசிவருவதாகக் கூறும் விராட் கோலியிடமிருந்தே இப்படி ஒரு தகவல் வந்துள்ளதால் அவர் அணிக்குத் திரும்ப வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

                                        

அதேநேரம் அவர் வீரராக ஆர்சிபி அணிக்குத் திரும்புவாரா அல்லது ஆலோசகர் ,பயிற்சியாளர் போன்ற ரோல்களுக்காக வரவுள்ளாரா எனும் தகவல் தெரியவில்லை.

மேலும் படிக்க | 'IPL' ஃபேனா நீங்க? அப்போ கண்டிப்பா இது உங்களுக்குத்தான்! #Facts-Of-IPL

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News