’விராட் கோலியால் தான் ஜெயிச்சோம்’ கங்குலியின் கிண்டல்

விராட் கோலியால் தான் டெல்லி அணி வெற்றி பெற்றதாக சவுரவ் கங்குலி கிண்டலாக தெரிவித்துள்ளார். போட்டிக்குப் பிறகு விராட் கோலியுடன் கைக்குலுக்கிக் கொண்ட கங்குலி, பேட்டி ஒன்றில் இதனை கூறியுள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : May 7, 2023, 09:27 AM IST
  • ஆர்சிபி அணியை வீழ்த்திய டெல்லி அணி
  • புள்ளிப் பட்டியலில் ஒரு இடம் முன்னேற்றம்
  • கைக்குலுக்கிக் கொண்ட விராட் கோலி - கங்குலி
’விராட் கோலியால் தான் ஜெயிச்சோம்’ கங்குலியின் கிண்டல் title=

டெல்லி மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடந்தது. தொடர் தோல்விகளை சந்தித்த டெல்லி அணி இப்போது உட்சக்கட்ட பார்முக்கு திரும்பி பெங்களூரு அணியை அடித்து துவம்சம் செய்தது தொடர்ச்சியாக 5 தோல்விகளை சந்தித்த அந்த அணி, கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் 4-ல் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து 9வது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது. இது டெல்லி அணிக்கு மிகப்பெரிய உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் கொடுத்திருப்பதாக சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்

ஆர்சிபி ரன் குவிப்பு 

டெல்லி அருண்ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பந்துவீச, ஆர்சிபி அணி பேட்டிங் விளையாடியது. விராட் கோலி மற்றும் டூப்பிளசிஸ் ஆகியோர் ஓபன்னிங் இறங்கி அதிரடியாக விளையாடினர். இதனால் ஆர்சிபி அணியின் ஸ்கோரும் சீரான வேகத்தில் உயர்ந்து கொண்டிருக்க திடீரென டூப்பிளசிஸ் அவுட்டானார். பின்னர் வந்த மேக்ஸ்வெல் உடனடியாக அவுட்டாக, விராட் கோலி அரைசதம் அடித்து அவுட்டானார். 46 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார். இறுதிக் கட்டத்தில் லாம்ரோர் அதிரடியாக ஆடி அரைசதம் விளாச, 181 ரன்கள் எடுத்தது ஆர்சிபி அணி.

மேலும் படிக்க | CSK vs MI: பினிஷ் செய்த தோனி... மும்பையை மீண்டும் வீழ்த்திய சிஎஸ்கே - ஜொலிக்கும் பிளேஆப் கனவு!

டெல்லி வாண வேடிக்கை

இமாலய இலக்காக இருந்தாலும், டெல்லி அணியில் ஓப்பனிங் இறங்கிய வார்னர் மற்றும் சால்ட் ஆகியோர் வாண வேடிக்கைகளை ஆரம்பத்தில் இருந்தே காட்ட தொடங்கினர். குறிப்பாக பிலிப் சால்ட் ஆர்சிபி அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். அவரின் அதிரடியால் டெல்லி அணியின் வெற்றி எளிதானது. 45 பந்துகளில் 87 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதனால் டெல்லி அணி 16.4 பந்துகளில் 187 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

கங்குலி - விராட் கோலி

இந்த வெற்றியால் டெல்லி அணி மிக உற்சாகமடைந்தது. தொடர்ச்சியாக புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த அந்த அணி இந்த வெற்றிக்குபிறகு ஒரு இடம் முன்னேறி 9வது இடத்தை பிடித்தது. போட்டிக் பிறகு விராட் கோலி மற்றும் சவுரவ் கங்குலி ஆகியோர் கைலுக்கிக் கொண்டனர். கடந்த சில வாரங்களாக ஒரு சர்சையாக இது நீடித்த நிலையில், இப்போட்டியில் பரஸ்பரம் கைக்குலுக்கி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். இதன்பின்னர் பேட்டி கொடுத்த கங்குலி, விராட் கோலியின் இன்னிங்ஸ் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், சூழலுக்க ஏற்ப அவர் நன்றாக விளையாடினார். அதேநேரத்தில் எங்கள் அணி பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டதால் நாங்கள் வெற்றி பெற்றோம் என கூறியுள்ளார். 

மேலும் படிக்க | IPL 2023: குஜராத்திடம் மீண்டும் மீண்டும் உதை வாங்கும் ராஜஸ்தான்... டாப்பில் ஹர்திக் படை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News