ஐபிஎல் 2023 லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் முதல் லீக் போட்டியில் ஹைதராபாத்தில் எதிர்கொண்டனர். ஆயிரகணக்கான ஆரஞ்சு ஆர்மி ரசிகர்கள் மைதானத்தை ஆக்கிரமித்து சன்ரைசர்ஸ் அணிக்கு ஆதரவை தெரிவிக்க, மறுபுறம் ராஜஸ்தான் அணி பேட்டிங்கில் வாணவேடிக்கை காட்டினர். டாஸ் வென்று சன்ரைசர்ஸ் அணி கேப்டன் புவனேஷ்வர் குமார் பவுலிங்கை தேர்வு செய்ததால், ராஜஸ்தான் அணியில் இளம் வீரர் ஜெய்ஷ்வால் மற்றும் பட்லர் ஆகியோர் ஓபனிங் இறங்கினர். இவரும் முதல் ஓவரில் இருந்தே அதிரடியை தொடங்கினர்.
Jos Buttler scored 54 runs from 22 balls. pic.twitter.com/6zJXHqpTSc
— Johns. (@CricCrazyJohns) April 2, 2023
குறிப்பாக பட்லர் பேட்டில் பட்ட பந்துகள் எல்லாம் பவுண்டரி எல்லைக்கோட்டை நோக்கியே ஓடிக் கொண்டிருந்தது. இதனால் மளமளவென ராஜஸ்தான் அணியின் ரன்கள் உயர, 3.4 ஓவரில் அந்த அணி 50 ரன்களை கடந்தது. 5.5 ஓவரில் 85 ரன்களை எடுத்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் விக்கெட்டை அப்போது இழந்தது. 22 பந்துகளில் 55 ரன்கள் குவித்திருந்த பட்லர் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதில் 3 சிக்சர்களும் 7 பவுண்டரிகளும் அடங்கும். பட்லர் விக்கெட்டை எடுத்துவிட்டதால் நிம்மதி அடையலாம் என நினைத்துக் கொண்டிருந்த சன்ரைசர்ஸ் அணிக்கு ஜெய்ஷ்வால் - சாம்சன் இணை மீண்டும் சரவெடி காட்ட தொடங்கியது.
Fifty for Jaiswal, continues his dream touch from domestics.
Fifty from 34 balls, A big future ahead. pic.twitter.com/vdK2FHdVvy
— Johns. (@CricCrazyJohns) April 2, 2023
இருவரும் சேர்ந்து பந்துகளை எல்லைக்கோடுகளை நோக்கி பறக்க விட தொடங்கினர். இளம் வீரரான ஜெய்ஷ்வால் 37 பந்துகளில் 54 ரன்களும், சாம்சன் 32 பந்துகளில் 55 ரன்களும் விளாசி விக்கெட்டை பறிகொடுத்தனர். இதில் சாம்சன் 3 பவுண்டரி மற்றும் 4 சிக்சர்களை விளாசினார். அடுத்து வந்த படிக்கல் மற்றும் பராக் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்த நிலையில் இறுதி கட்டத்தில் அதிரடியாக ஹெட்மயர் 22 ரன்கள் எடுத்தார்.
— Johns. (@CricCrazyJohns) April 2, 2023
20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது. ஒரு கட்டத்தில் 250 ரன்களை கடக்கும் நிலையில் ராஜஸ்தான் ஸ்கோர் இருந்தது. இருப்பினும் இந்த ஐபிஎல் தொடரில் 200 ரன்களை கடந்த முதல் அணி என்ற பெருமையை பெற்றது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ