IPL 2023: ஒரே நாளில் 3 பேரிடம் அடுத்தடுத்து மாறிய ஆரஞ்சு தொப்பி

ஐபிஎல் தொடரில் சனிக்கிழமை அன்று ஆரஞ்சு நிற தொப்பி சில மணி நேரங்களில் 3 பேரிடம் மாறியது. முதலில் பட்லரிடம் இருந்து வார்னருக்கு சென்ற ஆரஞ்சு தொப்பி, அடுத்து ருதுராஜ் கெய்வாட்டுக்கு சென்றது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 9, 2023, 02:48 PM IST
IPL 2023: ஒரே நாளில் 3 பேரிடம் அடுத்தடுத்து மாறிய ஆரஞ்சு தொப்பி  title=

ஐபிஎல் தொடரில் சனிக்கிழமை அன்று 2 லீக் போட்டிகள் நடைபெற்றன. முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், 2வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளும் மோதின. இந்த இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக ஆடிய வார்னர், பட்லர் மற்றும் ருதுராஜ் கெய்வாட் ஆகிய மூவரிடம் சில மணி நேரங்களில் மாறிக் கொண்டே இருந்தது. ராஜஸ்தான் - டெல்லி போட்டி தொடங்கும் வரை அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ருதுராஜ் முதல் இடத்தில் இருந்தார். அவர் ஆரஞ்சு தொப்பியை வைத்திருந்தார்.

மேலும் படிக்க | IPL 2023: சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி! சுருண்டது மும்பை இண்டியன்ஸ்

ராஜஸ்தான் - டெல்லி மாலை தொடங்கியதும் ஜாஸ் பட்லர் அதிரடியாக விளையாடி 51 பந்துகளில் 79 ரன்கள் சேர்த்தார். இதில் 11 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடங்கும். இதன் காரணமாக 152 ரன்கள் பெற்ற பட்லர் ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்றினார். அதே ஆட்டத்தில் டெல்லி அணியின் டேவிட் வார்னர் அபாரமாக விளையாடினார். 55 பந்துகளை எதிர்கொண்டவர் 65 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் டேவிட் வார்னர், நடப்பு சீசனில் 158 ரன்கள் சேர்த்து அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறி அரஞ்சு நிற தொப்பியை பட்லரிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

இரவில் மும்பை - சென்னை அணிகள் மோதும்போது, சிறப்பாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் 36 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் 189 ரன்கள் அடித்து இந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் மீண்டும் முதல் இடத்துக்கு முன்னேறினார் ருதுராஜ் கெய்க்வாட். இதனைத் தொடர்ந்து மாலையில் அவரிடம் இருந்து சென்ற ஆரஞ்சு நிற தொப்பி, இரவில் அவர் வசமே வந்தடைந்தது. ஒரே நாளில் 3 பேரிடம் ஆரஞ்சு நிற தொப்பி பயணித்தது ஐபில் சுவாரஸ்யத்தில் இடம்பிடித்தது. 

மேலும் படிக்க | CSKvsMI: ரோகித்துக்கு பாடம் கற்பித்த தோனி - மும்பையில் சம்பவம் செய்த சிஎஸ்கே..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News