IPL 2023 DC vs CSK: ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 223 ரன்களை எடுத்துள்ளது. அதிகபட்சமாக கான்வே 87 ரன்களையும், ருதுராஜ் கெய்க்வாட் 79 ரன்களையும் எடுத்தனர்.
நடப்பு ஐபிஎல் தொடர் மிகவும் பரபரப்பாக நிலையை எட்டியுள்ளது எனலாம். நான்கு லீக் போட்டிகள் மட்டும் உள்ள நிலையில், ஒவ்வொரு போட்டியும் புள்ளிப்பட்டியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அந்த வகையில், இன்று மாலை நடைபெற்ற டெல்லி - சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டியும் விதிவிலக்கில்லை எனலாம். இந்த போட்டியில் சென்னை அணி வெற்றிபெற்றால், எவ்வித தடையும் இன்றி பிளேஆப் சுற்றுக்கு தகுதிபெறும்.
ஒருவேளை தோல்வியடைந்தாலும், அடுத்து நடைபெறும் மூன்று போட்டிகளின் முடிவுகளின் அடிப்படையில் சிஎஸ்கே பிளேஆப் சுற்றுக்கு முன்னேறவும் வாய்ப்புள்ளது எனலாம். ஏற்கெனவே, தொடரில் இருந்து வெளியேறிவிட்ட டெல்லி அணி, தனது கடைசி லீக் போட்டியை சொந்த மண்ணில் விளையாடியது.
மேலும் படிக்க | IPL Playoffs: தோத்தாலும் ஜெயிச்சாலும் சிஎஸ்கே மீசையை முறுக்கலாம்... முழு விவரம் இதோ!
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். மாலை நேரத்தில் போட்டி நடைபெறுவதால், நேரமாக நேரமாக ஆடுகளம் மெதுவாக மாறி பேட்டிங் செய்ய கடினமாகும் என்பதால் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ததாக அவர் கூறினார். சென்னை அணியின் பிளேயிங் லெவனில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. லலித் யாதவ், சக்காரியா ஆகியோர் டெல்லி சேர்க்கப்பட்டு, இஷாந்த் சர்மாவுக்கு ஓய்வளிக்கப்பட்டது.
தொடர்ந்து பேட்டிங் செய்ய வந்த கான்வே - ருதுராஜ் ஜோடி தொடக்கத்தில் இருந்தே ரன்களை குவிக்க தொடங்கியது. கான்வே தொடக்கத்தில் பவுண்டரிகளை குவிக்க, ருதுராஜ் நிதானம் காட்டினார். 6 ஓவர்களில் இந்த ஜோடி 52 ரன்களை குவித்தது.
10ஆவது ஓவர் வரை நிதானம் காட்டிய ருதுராஜ், அக்சர் படேல் வீசிய அந்த ஓவரில் 2 சிக்ஸர்களை அடித்து தனது அரைசதத்தையும் பதிவுசெய்தார். மேலும், குல்தீப் வீசிய 12ஆவது ஓவரில் தொடர்ந்து 3 சிக்ஸர்களை அடித்து மிரட்டினார். கான்வேவும் 33 பந்துகளில் அரைசதம் அடித்தார். நன்றாக விளையாடி வந்த இந்த ஜோடி சக்காரியா வீசிய 15ஆவது ஓவரில் பிரிந்தது. கெய்க்வாட் 7 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 50 பந்துகளில் 79 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து, துபே களமிறங்கி கான்வேவுக்கு துணை நின்றார். கான்வே தொடர்ந்து அதிரடி காட்டினார். கலீல் அகமது வீசிய 18ஆவது ஓவரில் இரண்டு சிக்ஸர்களை அடித்து தூபே மிரட்டினார். இருப்பினும் அந்த ஓவரிலேயே தூபே 9 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து, கான்வே 52 பந்துகளில் 11 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 87 ரன்களை எடுத்தார். இதையடுத்து, கடைசி ஓவரில் ஜடேஜாவின் அதிரடியில் 16 ரன்கள் குவிக்கப்பட்டது. இதனால், 20 ஓவர்களில் சிஎஸ்கே 223 ரன்களை வெறும் 3 விக்கெட்டுகள் இழப்பில் பதிவு செய்தது. ஜடேஜா 7 பந்துகளில் 20 ரன்களுடனும், தோனி 4 பந்துகளில் 5 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார். நோர்க்கியா, சக்காரியா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இதைத்தொடர்ந்து, 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி பேட்டிங் செய்து வருகிறது.
மேலும் படிக்க | DC vs CSK: தோனி விளையாடும் கடைசி போட்டி? என்ன நடக்கிறது சென்னை அணியில்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ