IPL 2023 Qualifier 1: நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியை, முதல் குவாலிஃபயர் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சந்திக்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியின் டாஸை வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது.
இந்த போட்டி சேப்பாக்கத்தில் உள்ள 5ஆவது பிட்ச்சில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் அதிக ரன்கள் குவிக்கப்பட வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்படுகிறது. இதே பிட்ச்சில் தான் சென்னை - பஞ்சாப் அணிகள் விளையாடின. அதில், சென்னை முதலில் பேட்டிங் செய்து 200 ரன்களை எடுத்தும் தோல்வியடைந்தது.
டாஸ் தோற்றது சிஎஸ்கே அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தினாலும், ஒருவேளை காற்றின் வேகம் அதிகமாக இருந்து பனிப்பொழிவு குறைந்தால் அது சிஎஸ்கேவுக்கு பலனளிக்க வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகிறது. டாஸ் வென்ற பின் பேசிய குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா," முதலில் பந்து வீச விரும்புகிறோம். பனி வரும் என்று நாங்கள் கேள்விப்பட்டோம். எனவே சரியாக இலக்கு என்ன என்பதை அறிய விரும்புகிறோம்.
தர்ஷன் அறிமுகம்
டாப்-2 க்கு வந்த பிறகு ஓய்வெடுக்கச் சொன்னார்கள், ஆனால் நாங்கள் அதை விரும்பவில்லை. அதிக கவனம் செலுத்தி நல்ல கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம். நாங்கள் ஒரு புத்திசாலித்தனமான அணி, நாங்கள் ஒரே ஒரு வழியில் விளையாடுவதில்லை, விக்கெட்டில் இருந்து சிறந்ததைப் பெறுவதை உறுதிசெய்கிறோம் மற்றும் அணியை மாற்றியமைத்துள்ளோம். யாஷ் தயாளுக்குப் பதிலாக தர்ஷன் நல்கண்டே வருகிறார்" என்றார்.
The Playing XIs are IN!
What are your thoughts on the two sides for #Qualifier1?
Follow the match https://t.co/LRYaj7cLY9#TATAIPL | #GTvCSK pic.twitter.com/yXcivEGKdu
— IndianPremierLeague (@IPL) May 23, 2023
அவர்கள் நல்ல சேஸ்ஸிங் அணி
தொடர்ந்து பேசிய தோனி கூறுகையில்,"நாங்கள் முதலில் பந்துவீச விரும்பினோம், காரணம் அவர்கள் ஒரு சிறந்த சேஸ்ஸிங் அணி. நாங்கள் நிலைமையை சற்று சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டோம், இது போன்ற ஒரு போட்டியில், இளம் வீரர்கள் நன்றாக விளையாடினார்கள். உங்கள் பலத்தை ஆதரிப்பது முக்கியம், நம்பிக்கை நிலை அதிகமாக இருக்க வேண்டும். அவர்களால் அதைச் செய்ய முடிந்தது, அதனால்தான் நாங்கள் நன்றாக விளையாடியுள்ளோம். கடைசி ஆட்டத்தில் நிறைய பனி இருந்தது, ஆனால் காற்று வீசியதால், இன்றிரவு அதைப் பற்றி சொல்ல முடியாது, ஆனால் பிட்ச் வறண்டதாகத் தெரிகிறது. எங்கள் அணியில் எந்த மாற்றமும் இல்லை" என்றார்.
பிளேயிங் லெவன்
குஜராத் டைட்டன்ஸ்: சுப்மன் கில், விருத்திமான் சாஹா, ஹர்திக் பாண்டியா, தசுன் ஷனகா, டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், தர்ஷன் நல்கண்டே, மோகித் சர்மா, நூர் அகமது, முகமது ஷமி.
சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, அம்பதி ராயுடு, ஷிவம் துபே, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா
மேலும் படிக்க | ஐபிஎல் போட்டிகளில் ஆரஞ்சு தொப்பியை பெறாத துரதிருஷ்டசாலி கிரிக்கெட்டர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ