சென்னை: ஐபிஎல் 2023 கோலாகலமாக நிறைவு பெற்ற நிலையில், மே 29ம் தேதியன்று (திங்கள்கிழமை) இரவு இந்தியன் பிரீமியர் லீக் பட்டத்தை 5வது முறையாக வென்று, மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) சமன் செய்துள்ளது. குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியின் சிறந்த பதிவுகளைப் பார்ப்போம்.
6வது ஐபிஎல் பட்டத்தை வென்று சாதனை படைத்த அம்பதி ராயுடு
அம்பதி ராயுடு ஒரு வீரராக ஐபிஎல் பட்டத்தை வென்ற அணியில் ஆறாவது முறையாக இடம் பெற்று சாதனை படைத்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் அம்பதி ராயுடு, ஒரு வீரராக (ஆறு) அதிக ஐபிஎல் பட்டங்களை வென்றவர்கள் பட்டியலில், ரோஹித் சர்மாவுடன் இணைந்து முதலிடத்தில் உள்ளார்.
அதிக ஐபிஎல் பட்டங்களை வென்ற எம்ஐயின் சாதனையை சமன் செய்த சிஎஸ்கே
சென்னை சூப்பர் கிங்ஸ் ஐந்து ஐபிஎல் பட்டங்களை வென்ற சாதனையை வைத்திருந்த மும்பை இந்தியன் அணியுடன் பட்டியலில் இணைந்தது. 2010, 2011, 2018, 2021 ஆகிய ஆண்டுகளில் ஐபிஎல் பட்டங்களை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ், சொந்த மண்ணில் ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது.
மேலும் படிக்க | CSK Champion: 5வது முறையாக சிஎஸ்கே சாம்பியன்..! தோனி ஆனந்த கண்ணீர்
250 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய முதல் கிரிக்கெட் வீரர்: எம்எஸ் தோனி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி ஐபிஎல் தொடரில் தனது 250வது போட்டியில் களமிறங்கினார். இந்த சாதனையை நிகழ்த்திய முதல் வீரர் தோனி. 243 ஆட்டங்களுடன் ரோஹித் ஷர்மாவு இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
ஐபிஎல் இறுதிப் போட்டியில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் சாய் சுதர்சன்
குஜராத் டைட்டன்ஸ் வீரர் சாய் சுதர்சன் ஐபிஎல் இறுதிப் போட்டியில் மூன்றாவது அதிகபட்ச ஸ்கோரான 96 ரன்களை பதிவு செய்தார். அவர் 2011 இல் RCB க்கு எதிராக முரளி விஜய்யின் ஸ்கோரை 95 ஐ கடந்தார். ஷேன் வாட்சன் (2018 இல் SRH க்கு எதிராக 117*) மற்றும் விருத்திமான் சாஹா (2014 இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR)க்கு எதிராக 115*) ஆகியோர் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.
ஐபிஎல் சீசனில் அதிக ரன் குவித்த 2வது வீரர்- சுப்மன் கில்
குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில் ஐபிஎல் சீசனில் இரண்டாவது அதிக ரன்களை (890) அடித்துள்ளார். அவர் 2022 பதிப்பில் எடுத்த 863 ரன்களை ஜோஸ் பட்லரின் எண்ணிக்கையை முறியடித்தார். விராட் கோலி 2016 ஆம் ஆண்டில் 973 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
ஐபிஎல் இறுதிப் போட்டியில் அதிக ஸ்கோரை பதிவு செய்த குஜராத் டைட்டன்ஸ்
ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 214/4 என்ற அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. 2016 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு (RCB) எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) ஸ்கோரான 208/7 ஐ கடந்தது குஜராத் டைட்டன்ஸ் அணி. அந்த இலக்கை எட்டி சென்னை அணி வெற்றிபெற்றது.
ஐபிஎல் சீசனில் CSK க்காக அதிக ரன் எடுத்த 2வது வீரர் டெவோன் கான்வே
டெவோன் கான்வே இப்போது, சிஎஸ்கே அணிக்காக இரண்டாவது அதிக ரன்களை (672) அடித்துள்ளார். நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் 2021 ஆம் ஆண்டில் முறையே 633 ரன்கள் மற்றும் 2021 இல் 635 ரன்கள் எடுத்துள்ளனர். 2013 சீசனில் மைக்கேல் ஹஸ்ஸி 733 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
35 சிக்சர்கள் சாதனை - ஷிவம் துபே
ஒரு சீசனில் சிஎஸ்கேக்காக அதிக சிக்ஸர்கள் (35) அடித்ததற்காக ஷேன் வாட்சனுடன் ஷிவம் துபே இப்போது முதலிடத்தில் உள்ளார். வாட்சன் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் 35 சிக்ஸர்களை அடித்தார்.
மேலும் படிக்க | கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எப்போது? தோனி சொன்ன முக்கிய பதில்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ