ஐபிஎல் 2025 மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில் இதற்கான எதிர்பார்ப்பு அதிக அளவில் உள்ளது. இந்த ஆண்டு நடைபெறும் ஏலத்திற்கு முன்பு சில விதிகளை மாற்றி உள்ளது ஐபிஎல் நிர்வாகம். மற்ற ஆண்டுகளை போல் இல்லாமல் இந்த முறை பிசிசிஐ தக்க வைப்புத் தொகையில் பெரிய மாற்றங்களைச் செய்துள்ளது. மேலும் பழைய விதிகளையும் கொண்டு வந்துள்ளது. இதனால் ஏலம் எப்போது நடைபெறும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர். இந்த புதிய விதியின் மூலம் ஐபிஎல் 2025 ஏலத்திற்கு முன் ஒவ்வொரு அணியும் 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம். அதே போல ரைட் டு மேட்ச் (RTM) விதிமுறைகளும் திரும்ப வந்துள்ளது. மெகா ஏலத்தில் ஒரு வீரரை ஏலத்தில் RTM பயன்படுத்தியும் எடுத்து கொள்ள முடியும்.
மேலும் படிக்க | சென்னை சூப்பர் கிங்ஸ் பிளானுக்கு ஆப்பு வச்ச ஐபிஎல் நிர்வாகம்
அதே போல ஏல தொகை மற்றும் வீரர்களின் சம்பளமும் உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு போட்டியிலும் விளையாடும் வீரர்களுக்கு 7 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது. இது உள்நாட்டு வீரர்களை அதிகம் ஊக்கப்படுத்தும். ஒவ்வொரு அணியும் தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை விரைவில் வெளியிட உள்ளனர். அதே போல சர்வதேச போட்டிகளில் 5 ஆண்டுகள் விளையாடாத வீரர்களை அன்கேப்டு பிளேயராக தக்க வைக்கும் முறையும் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் தோனி ஐபிஎல் 2025ல் விளையாட முடியும். இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யார் யாரை தக்கவைத்துக்கொள்வார்கள்? அவர்களின் சம்பள விவரங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
எம்எஸ் தோனிக்கு ரூ. 4 கோடி சம்பளம்
தோனியை அன்கேப்டு பிளேயராக தக்க வைத்து கொள்ள முடியும் அவரை சிஎஸ்கே ரூ.4 கோடிக்கு தக்க வைக்கும். இந்த விதி மற்ற அணிகளைவிட சிஎஸ்கே-விற்கு அதிகம் உதவும். ஐபிஎல் 2025ல் தோனி விளையாடுவாரா? இல்லையா? என்ற சந்தேகம் இருந்து வந்த நிலையில், இந்த அறிவிப்பு அதனை உறுதிப்படுத்தி உள்ளது. மேலும் இந்த தொகைக்கு தோனி தக்க வைக்கப்பட்டால், மற்ற வீரர்களை தக்கவைக்க மிகவும் உதவியாக இருக்கும். தோனி பெரிதாக பேட்டிங் செய்யவில்லை என்றாலும், அவர் களத்தில் இருப்பது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஐபிஎல் 2025ல் தோனி விளையாடினாள் அவரது சம்பளம் ரூ.4 கோடி ஆகும்.
ருதுராஜ் கெய்க்வாடுக்கு ரூ. 18 கோடி சம்பளம்
கடந்த ஆண்டு சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டார். இந்த ஆண்டும் அவரே கேப்டனாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் அவருக்கு அதிக சம்பள உயர்வு கிடைக்கவும் வாய்ப்புள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் வீரராக ருதுராஜை தேர்வு செய்தால் ரூ.18 கோடிக்கு தக்க வைக்க வேண்டும். ஐபிஎல் 2022 மெகா ஏலத்திற்கு முன்பு சிஎஸ்கே அவரை ரூ.6 கோடிக்கு தக்க வைத்தது. ஆனால் இந்த முறை ரூ.18 கோடி கொடுக்க வேண்டும்.
ரவீந்திர ஜடேஜாவுக்கு ரூ. 14 கோடி சம்பளம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நீடிக்க வாய்ப்புள்ளதால், ஜடேஜா இரண்டாவதாக தக்க வைக்கப்படும் வீரராக இருப்பார். கடந்த 2012ம் ஆண்டு முதல் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார் ஜடேஜா. ஐபிஎல் 2022 மெகா ஏலத்திற்கு முன் சிஎஸ்கேயின் முதல் தேர்வாக ஜடேஜா இருந்தார். ஐபிஎல் 2022 முதல் 2024 வரை ரூ. 16 கோடி சம்பளம் பெற்று வந்தார். இந்த முறை சென்னை அணி அவரை தக்க வைத்தால், 2 கோடி கம்மியாக சம்பளம் பெற வேண்டும்.
சிமர்ஜீத் சிங்குக்கு ரூ. 4 கோடி
சிஎஸ்கே தக்கவைக்கக்கூடிய இரண்டாவது அன்கேப்ட் வீரராக சிமர்ஜீத் சிங் இருக்க வாய்ப்புள்ளது. வலது கை வேகப்பந்து வீச்சாளர் இதுவரை சிஎஸ்கே அணிக்காக 10 போட்டிகளில் விளையாடி, 8.63 ரன் ரேட்டில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சிமர்ஜீத் சிங் வருங்கால நட்சத்திர பந்துவீச்சாளராக இருக்க வாய்ப்புள்ளதால், சிஎஸ்கே அவரை மெகா ஏலத்திற்கு முன் வெளியிட வாய்ப்பில்லை என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | ஐபிஎல் 2025 மெகா ஏலம்! புதிய விதிகள் எப்படி செயல்படும்? முழு விவரம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ