ஐபிஎல்2024: 50 லட்சத்துக்கு சொக்கத் தங்கமே காத்திருக்குது... எந்த அணிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுதோ?

ஐபிஎல் 2024 ஏலத்தில் மிக அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படும் ரச்சின் ரவீந்திரா வெறும் 50 லட்சம் என்ற அடிப்படை விலைக்கு தன்னுடைய பெயரை பதிவு செய்திருக்கிறார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 2, 2023, 02:02 PM IST
  • 50 லட்சம் அடிப்படை விலை
  • பெயரை பதிவு செய்த ரச்சின் ரவீந்திரா
  • ஐபிஎல் 2024 ஏலத்தில் காத்திருக்கும் ஜாக்பாட்
ஐபிஎல்2024: 50 லட்சத்துக்கு சொக்கத் தங்கமே காத்திருக்குது... எந்த அணிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுதோ? title=

ஐபிஎல் 2024 தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 19 ஆம் தேதி துபாயில் நடைபெற இருக்கிறது. ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக இந்தியா அல்லாமல் வெளிநாட்டில் வீரர்களுக்கான ஏலம் நடக்கிறது. அண்மையில் தான் பத்து அணிகளும் தங்களின் ரீட்டெயின் வீரர்கள் மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டன. அதில் ஆச்சிரியமான விடுவிப்பாக இருந்தது குஜராத் அணியின் கேபட்ன் ஹர்திக் பாண்டியா. அவரது தலைமையில் குஜராத் டைட்டன்ஸ் அணி ஐபிஎல் தொடரில் முதன்முறையாக அறிமுகமான ஆண்டே சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. அடுத்த ஆண்டு இறுதிப் போட்டி வரை முன்னேறியது.

மேலும் படிக்க | விராட் கோலி 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து விரைவில் ஓய்வு? பிசிசிஐ போடும் கண்டிஷன்

ஆனால் அந்த அணியில் ஹர்திக் பாண்டியா தொடர விரும்பவில்லை. இதனை குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகத்திடம் தெரிவித்த அதேவேளையில் மும்பை இந்தியன்ஸ் அணியிடமும் தெரிவித்திருக்கிறார். அதாவது தன்னுடைய சொந்த அணியான மும்பை அணிக்கு விளையாட விரும்புவதாக கூறினார். அவர்களும் இப்படியொரு வாய்ப்பை தான் பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர் என்பதால் மிகப்பெரிய தொகை கொடுத்து குஜராத் அணியிடம் டீல் பேசி வாங்கிவிட்டனர். அதேபோல் கேம்ரூன் கிரீன் ஆர்சிபி அணிக்கு வர்த்தகம் செய்யப்பட்டார். இந்த இரண்டும் ஐபிஎல் ஏலத்துக்கு முன்பே நடந்த ஜாக்பாட் பேரங்கள்.

இதற்கு இணையான சுவாரஸ்யங்கள் எல்லாம் ஐபிஎல் 2024 மினி ஏலத்தில் காத்திருக்கிறது. ஒவ்வொரு அணிகளும் யார் யாரை எடுக்கலாம் என லிஸ்ட் போட்டு வைத்திருக்கிறார்கள். குறிப்பாக இந்தியாவில் நடைபெற்ற சையது முஷ்டாக் அலி 20 ஓவர் தொடர் மற்றும் விஜய் ஹசாரேவில் விளையாடும் வீரர்களை ஐபிஎல் அணிகள் குறி வைத்திருக்கிறார்கள். தமிழக வீரர் ஷாருக்கானுக்கு ஐபிஎல் ஏலத்தில் அதிக டிமாண்ட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் வெளிநாட்டு பிளேயர்கள் லிஸ்டிலும் சிலர் இருக்கின்றனர். அதில் முதன்மையான இடத்தில் இருப்பவர் நியூசிலாந்து அணியின் இடது கை பேட்ஸ்மேனும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ரச்சின் ரவீந்திரா. அவர் இந்திய அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடியதுடன் உலக கோப்பை தொடரிலும் முத்திரை பதிக்கும் வகையில் விளையாடினார்.

அவர் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் விளையாடுவதை எதிர்பார்த்து காத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். பெங்களுரை பூர்வீகமாக கொண்டிருப்பதால் ஆர்சிபி அணிக்காக விளையாட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். அதற்கேற்ப ஐபிஎல் 2024 ஏலத்துக்கு தன்னுயை பெயரை அதிகாரப்பூர்வமாக ரச்சின் பதிவு செய்திருக்கிறார். அடிப்படை விலையாக 50 லட்சம் ரூபாயை அவர் நிர்ணயித்திருக்கிறார். இவரை ஏலம் எடுக்க 10 அணிகளும் மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த விலையை அவர் நிர்ணயித்திருப்பதால் ரச்சின் ரவீந்திராவுக்கு பெரிய ஜாக்பாட் காத்திருக்கிறது என்றே சொல்லலாம்.

மேலும் படிக்க | ரோஹித் மற்றும் தோனி இந்தியாவின் சிறந்த கேப்டன் யார்? அஷ்வின் சொன்ன பதில்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News