ஐபிஎல் 2022-ல் 10 அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதற்கான விவரங்கள் சமீபத்தில் வெளியானது. மார்ச் 26ம் தேதி தொடங்கி மே 29 வரை போட்டிகள் நடைபெற உள்ளது. ஆனாலும் ஐபிஎல் 2022க்கான முழு அட்டவணை இன்னும் வெளியாகவில்லை.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022 இன் தொடக்க ஆட்டம் இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவாக உள்ளது, மேலும் மார்ச் 26 அன்று நடைபெறும் முதல் போட்டியில் எந்த எந்த அணிகள் விளையாட போகிறது என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். ஐபிஎல் 15வது பதிப்பின் முதல் ஆட்டத்தில் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாட உள்ளதாக தகவல்கள் வெளியாக உள்ளது. இந்த இரு அணிகளும் 2021 ஐபிஎல் பைனல் போட்டியில் விளையாடின. இந்த போட்டியில் தோனியின் சிஎஸ்கே நான்காவது முறையாக ஐபிஎல் பட்டத்தை வென்றது.
ஐபிஎல் 2022 சிஎஸ்கே vs கேகேஆர் போட்டியுடன் தொடங்கும். நடப்பு சாம்பியன்கள் அடுத்த சீசனில் முதல் போட்டியில் விளையாடுவதற்கான தற்போதைய விதிமுறைகளில் எந்த மாற்றமும் செய்யவில்லை. ஆரம்பத்தில் போட்டிகளுக்கு 25% பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர் என்று பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 10 அணிகள் கொண்ட ஐபிஎல் 2022 மார்ச் 26 அன்று வான்கடே ஸ்டேடியத்தில் தொடங்கவுள்ளது. மும்பையில் உள்ள பிரபோர்ன் ஸ்டேடியம், நவி மும்பையின் DY பாட்டீல் ஸ்டேடியம் மற்றும் புனேவின் மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியமும் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மும்பை கிரிக்கெட் சங்கத்தின் பாந்த்ரா-குர்லா வளாகத்தில் உள்ள மைதானம் மற்றும் தானேயில் உள்ள தாதோஜி கொண்டதேவ் மைதானம் ஆகியவை அணிகள் பயிற்சி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் 14 லீக் ஆட்டங்களில் (7 ஹோம் மேட்ச்கள் மற்றும் 7 அவே மேட்ச்கள்) விளையாட உள்ளன. ஐபிஎல் 2022ல் 70 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளது, அதைத் தொடர்ந்து 4 பிளேஆஃப் போட்டிகள் நடைபெறும். ஒவ்வொரு அணியும் 5 அணிகளுடன் இரண்டு முறையும், மீதமுள்ள 4 அணிகள் ஒரு முறையும் விளையாடும்.
மேலும் படிக்க | ஷ்ரேயாஸ் ஐயரால் கோலியின் இடத்திற்கு ஆபத்து?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR