பாக்சிங்டே-வில் இந்தியா பதிவு செய்த 3 பிரம்மாண்ட வெற்றிகள்..!

பாக்சிங்டே (BOXING DAY) நாள் டெஸ்ட் போட்டிகளில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2 மகத்தான வெற்றிகளை பெற்றுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 26, 2021, 11:31 AM IST
பாக்சிங்டே-வில் இந்தியா பதிவு செய்த 3 பிரம்மாண்ட வெற்றிகள்..! title=

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கு அடுத்த நாள் பாக்சிங்டே என அழைக்கப்படுகிறது. இந்த நாளில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் வழக்கமாக பாக்சிங்டே டெஸ்ட் போட்டிகளை நடத்துவதை பாரம்பரியமாக கொண்டிருக்கிறார்கள். இந்தவருடம் ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக பாக்சிங்டே டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று வந்தாலும், மிக குறிப்பிடத்தகுந்த 3 வெற்றிகள் எது? என்பதை தெரிந்து கொள்ளலாம். 

1. இந்தியா VS ஆஸ்திரேலியா (2020)

2020 ஆம் ஆண்டு பாக்சிங் டே நாளில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டி விளையாடியது. மெல்ர்பேர்ன் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது. அடிலெய்டு மைதானத்தில் 36 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வியடைந்த பிறகு, இப்போட்டியில் இந்திய அணி களமிறங்கியது. விராட் கோலி, சொந்த காரணங்களுக்காக நாடு திரும்பிய நிலையில், அஜிங்கியா ரஹானே தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டு 8 விக்கெட் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்தது. சுப்மான் கில் மற்றும் சிராஜ் ஆகியோர் முதன்முதலாக டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்கள். ரஹானே சதம் விளாசினார். அஸ்வின், ஜடேஜா, சிராஜ் மற்றும் பும்ரா ஆகியோர் இந்தப் போட்டியில் பந்துவீச்சில் மிரட்டினர்.

ALSO READ | IND vs SA Test: வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் விராட் கோலி!

2. இந்தியா VS தென்னாப்பிரிக்கா (2010) 

3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா படுதோல்வியை சந்தித்திருந்தது. பாக்சிங்டே நாளில் 2வது டெஸ்ட் போட்டி டர்பனில் நடைபெற்றது. 205 ரன்களில் ஆல்அவுட்டான இந்தியா, தென்னாப்பிரிக்கா அணியை 131 ரன்களுக்கு சுருட்டியது. அற்புதமாக பந்துவீசிய ஹர்பஜன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து 2வது இன்னிங்ஸில் லக்ஷ்மன் 96 ரன்கள் எடுக்க இந்தியா 228 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 303 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி, 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. 

3. இந்தியா VS ஆஸ்திரேலியா (2018)

2018 ஆம் ஆண்டு வரை இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை. இந்தமுறையும் அதே சோகம் தொடரும் என பலரும் கணித்திருந்தார்கள். ஆனால், இந்திய அணியின் ஆட்டம் வேறாக இருந்தது. முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா, 2வது போட்டியில் தோல்வியை தழுவியது. பாக்சிங்டே நாளில் 3வது டெஸ்ட் போட்டி மெல்பேர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், முதல்முறையாக இந்திய அணிக்கு டெஸ்ட் போட்டியில் அறிமுகமான மயங்க் அகர்வால், விராட் கோலி ஆகியோர் அரைசதம் விளாச, புஜாரா சதம் விளாசினார். முதல் இன்னிங்ஸில் 443 ரன்கள் எடுத்த இந்திய அணி, ஆஸ்திரேலியாவை 151 ரன்களுக்கு சுருட்டியது. 

ALSO READ | SA Tour: இந்திய அணியில் கேள்விக்குறியாகும் 2 பேரின் இடம்!

2வது இன்னிங்ஸில் 106 ரன்களுக்கு இந்தியா ஆட்டமிழந்தாலும், ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி இலக்காக 399 ரன்களை நிர்ணயித்தது. பும்ராவின் மிரட்டலான பந்துவீச்சால் ஆஸ்திரேலிய அணி 261 ரன்களுக்கு ஆட்டமிழக்க வைத்து, பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்தது. சிட்னியில் நடைபெற இருந்த கடைசி டெஸ்ட்போட்டி மழையால் கைவிடப்பட, இந்திய அணி முதன்முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News