INDvsWI : இந்தியா பந்துவீச்சில் திணறும் மேற்கிந்திய வீரர்கள்...

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா பந்துவீச்சு தேர்வு செய்து விளையாடி வருகின்றது.

Last Updated : Aug 3, 2019, 08:24 PM IST
INDvsWI : இந்தியா பந்துவீச்சில் திணறும் மேற்கிந்திய வீரர்கள்... title=

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா பந்துவீச்சு தேர்வு செய்து விளையாடி வருகின்றது.

மேற்கிந்தியா சுற்றப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா மூன்று டி20, மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி இந்த மூன்று தொடர்களுக்கும் தலைமை வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் ரோஹித் சர்மா ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் துணை கேப்டனாகவும், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் அஜிங்க்யா ரஹானே துணை கேப்டனாக செயல்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளைப் பொறுத்தவரை, ஜேசன் ஹோல்டர் 50 ஓவர் போட்டிக்கு தலைமை வகிப்பார், அதே நேரத்தில் கார்லோஸ் ப்ரைத்வைட் டி20 அணியின் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை 2019 தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியிடன் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய இந்தியா, இந்த இழப்பைத் தணித்து மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் தங்களது பலத்தை நிறுபிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இத்தொடரின் முதல் டி20 போட்டி இன்று புளோரிடாவின் லாடர்ஹில்லில் நடைப்பெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சு தேர்வு செய்து விளையாடி வருகின்றது.

Trending News